மொய்ன் அலி வருகையால் 2-வது போட்டியில் மீண்டெழுமா சிஎஸ்கே – இன்றைய போட்டிக்கான அணி இதோ

CSK vs LSG
- Advertisement -

மும்பை நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் மார்ச் 31-ஆம் தேதியான இன்று நடைபெறும் 7-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்வதற்கு ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னையும் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோவும் முழுமூச்சுடன் போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என நம்பலாம்.

Dhoni

- Advertisement -

மீண்டெழுமா சென்னை:
ஏனெனில் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனாக விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று துவங்கிய ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியடைந்தது. மறுபுறம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தங்களின் முதல் போட்டியில் களமிறங்கிய லக்னோ அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து வரலாற்றில் தங்களது முதல் போட்டியிலேயே தோல்வியை பதிவு செய்தது. எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு 2 அணிகளும் தள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக கொல்கத்தாவுக்கு எதிரான முதல் போட்டியில் களமிறங்கிய சென்னைக்கு அனைவரும் எதிர்பார்த்த ருதுராஜ் கைக்வாட் டக் அவுட்டாக அவருடன் ஜோடியாக களமிறங்கிய மற்றொரு தொடக்க வீரர் டேவோன் கான்வே 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். அப்படி ஓபனிங் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் கடைசிவரை மீளமுடியாத சென்னை அதன்பின் ஓரளவு சிறப்பாக பந்து வீசிய போதிலும் வெற்றியை தொட முடியவில்லை.

வழு சேர்ப்பாரா மொய்ன் அலி:
இப்படிப்பட்ட நிலையில் லக்னோவுக்கு எதிரான 2-வது போட்டிக்கான சென்னை அணியில் இங்கிலாந்தைச் சேர்ந்த நட்சத்திர ஆல்ரவுண்டர் மொயின் அலி சேர்ந்துள்ளார். விசா கிடைக்காத காரணத்தால் தாமதமாக சென்னை அணியில் இணைந்த அவர் கொல்கத்தாவுக்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது. கடந்த வருடம் ஒரு ஆல்ரவுண்டராக அசத்திய அவர் இப்போது தோல்வியில் துவண்டு கிடக்கும் சென்னை அணியில் இணைந்துள்ளது அந்த அணிக்கு மிகப்பெரிய பலத்தை சேர்த்துள்ளது என்றே கூறலாம்.

- Advertisement -

எனவே அவர் அணியில் இணைந்த புத்துணர்ச்சியுடன் லக்னோ அணிக்கு எதிரான இந்த போட்டியில் சென்னை அணி மீண்டெழுந்து வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு சென்னை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. கொல்கத்தாவுக்கு எதிரான முதல் போட்டியில் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றிய நிலையில் நடுவரிசையில் களமிறங்கிய ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, ஷிவம் துபே போன்ற முக்கியமான வீரர்களும் பெரிய அளவில் ரன்கள் குவிக்காதது சென்னைக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. எனவே இந்தப் போட்டியில் அவர்கள் நிச்சயம் ரன்களை குவித்தால் மட்டுமே சென்னை அணி வெற்றி பெற முடியும் என்பதை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும். மேலும் முதல் போட்டியில் 62/5 என தடுமாறிய சென்னை 100 ரன்களை தொடுமா என எதிர்பார்த்த நிலையில் 2 வருடங்களுக்கு பின் அரைசதம் அடித்து பழைய பன்னீர்செல்வமாக எம்எஸ் தோனி பார்முக்கு திரும்பியுள்ளது சென்னை அணிக்கு மிகப்பெரிய பலமாகும்.

bravo 1

அதேபோல் கொல்கத்தாவுக்கு எதிரான முதல் போட்டியில் நட்சத்திர அனுபவ வேகப்பந்து வீச்சாளர் ப்ராவோ 3 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்காக தனி ஒருவனாக போராடினார். அவரை தவிர ஏனைய வீரர்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதால் இந்த போட்டியில் கேப்டன் ரவீந்திர ஜடேஜா உட்பட அனைத்து பவுலர்களும் தரமாக செயல்பட்டால் மட்டுமே சென்னையை வெற்றி பெற வைக்க முடியும்.

- Advertisement -

உத்தேச அணி:
தற்போது சென்னை அணியில் மொயின் அலி இணைந்துள்ளதால் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் நிகழும் மாற்றங்களைப் பற்றி விவாதிப்போம்.

conway

ஓப்பனிங்: கொல்கத்தாவுக்கு எதிரான முதல் போட்டியில் சென்னை அணியின் ஓபனிங் படுமோசமாக சொதப்பியது தோல்விக்கு முக்கிய பங்காற்றியது. இருப்பினும் ஒருசில தோல்விகளுக்காக அடிக்கடி வீரர்களை மாற்றும் ஒரு அணியாக சென்னை எப்போதும் வரலாற்றில் இருந்ததில்லை. அந்த வகையில் 2-வது போட்டியிலும் ருதுராஜ் கைக்வாட் – டேவோன் கான்வே ஆகியோர் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

மிடில் ஆர்டர்: 3-வது இடத்தில் கடந்த வருடங்களில் ஆல்-ரவுண்டராக அசத்திய மொய்ன் அலி களமிறங்க கடந்த போட்டியில் அந்த இடத்தில் விளையாடிய ராபின் உத்தப்பா 4-வது இடத்திலும் அம்பத்தி ராயுடு 5-வது இடத்திலும் விளையாடுவார்கள் என நம்பலாம். 5-வது இடத்தில் ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே களமிறங்க 6 மற்றும் 7 ஆகிய இடங்களில் சூழ்நிலைக்கேற்ப எம்எஸ் தோனியும் ரவீந்திர ஜடேஜாவும் விளையாடுவார்கள்.

moeen ali 2

பவுலர்கள்: பந்துவீச்சு துறையில் மொயின் அலி வந்துள்ளதால் கடந்த போட்டியில் ஆல்-ரவுண்டராக விளையாடிய மிட்செல் சான்ட்னர் நீக்கப்பட உள்ளார். அதேப்போல் வேகப்பந்து வீச்சாளர்களாக முதல் போட்டியில் விளையாடிய டுவைன் பிராவோ, ஆடம் மில்னே ஆகியோருடன் இளம் வீரர் துஷார் தேஷ்பாண்டே விளையாடலாம். இதில் தேஷ்பாண்டேவுக்கு பதில் அண்டர்-19 கோப்பையில் அசத்திய இளம் ஆல்ரவுண்டர் ராஜ்வர்தன் ஹங்ரேக்கருக்கு வாய்ப்பளிக்கப்படலாம்.

இதையும் படிங்க : கிரிக்கெட்டின் ரொனால்டோ அவர்தான்! இந்திய வீரரை வியந்து பாராட்டும் இலங்கை வீரர் – விவரம் இதோ

லக்னோ அணிக்கு எதிராக களமிறங்கும் உத்தேச 11 பேர் சென்னை சூப்பர் கிங் அணி இதோ:
ருதுராஜ் கைக்வாட், டேவோன் கான்வே*, மொய்ன் அலி*, ராபின் உத்தப்பா, அம்பாதி ராயுடு, எம்எஸ் தோனி (கீப்பர்), ரவிந்திர ஜடேஜா (கேப்டன்), ஷிவம் துபே, ட்வயன் ப்ராவோ*, ஆடம் மில்னே*, துஷார் தேஷ்பாண்டே/ராஜ்வர்தன் ஹங்ரேக்கர். (*=வெளிநாட்டு வீரர்கள்)

Advertisement