கிரிக்கெட்டின் ரொனால்டோ அவர்தான்! இந்திய வீரரை வியந்து பாராட்டும் இலங்கை வீரர் – விவரம் இதோ

Rajapakshe
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் தொடரான ஐபிஎல் 2022 தொடர் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கோலாகலமாக துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று துவங்கிய இந்த தொடர் வரும் மே 29-ஆம் தேதி வரை 2 மாதங்களுக்கு மேல் ரசிகர்களுக்கு த்ரில் விருந்து படைக்க உள்ளது.

IPL 2022 (2)

- Advertisement -

இந்த தொடர் துவங்கிய ஒரு சில நாட்களிலேயே நிறைய இளம் வீரர்கள் அபாரமாக செயல்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்கள். அதேபோல் உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக தங்களை நிரூபித்து அதன்பின் பார்ம் இல்லாமல் தவித்து வந்த எம்எஸ் தோனி, குல்தீப் யாதவ், அஜிங்கிய ரஹானே போன்ற வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு இழந்த தங்களின் பார்மை மீட்டெடுக்க தொடங்கியுள்ளனர்.

மிரட்டிய பனுக்கா ராஜபக்சே:
அத்துடன் ஓடென் ஸ்மித் போன்ற திறமை வாய்ந்த வெளிநாட்டு வீரர்களும் இந்த தொடரில் முதல் முறையாக களமிறங்கிய முதல் போட்டியிலேயே அதிரடியாக விளையாடி ரசிகர்களின் பாராட்டுகளையும் கவனத்தையும் ஈர்த்தனர். அந்த வகையில் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக முதல் முறையாக விளையாடிய இலங்கை வீரர் பனுக்கா ராஜபக்சே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான தனது அறிமுக போட்டியிலேயே அதிரடி சரவெடியாக விளையாடினார்.

bhanuka Rajapaksa

குறிப்பாக அந்த போட்டியில் பெங்களூரு நிர்ணயித்த 206 என்ற இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வால் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். அதை அடுத்ததாக களமிறங்கிய ராஜபக்சே அப்படியே பயன்படுத்தி வெறும் 22 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 4 மெகா சிக்ஸர்கள் உட்பட 43 ரன்களை 195.45 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் விளாசி பஞ்சாப் அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

கிரிக்கெட்டின் ரொனால்டோ கிங் கோலி:
தற்போது 30 வயதை கடந்துள்ள இவர் பிட்னெஸ் காரணமாக தொடர்ந்து இலங்கை அணியில் புறக்கணிக்கப்பட்டு வந்தார். அதனால் விரக்தியடைந்த அவர் கடந்த ஜனவரி மாதம் தனது 30 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடை பெறுவதாக அறிவித்தார். அதனால் ஒரு சில இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் அவரை தொடர்புகொண்டு ஆதரவை அளித்த பின் ஒரு வாரம் கழித்து அந்த முடிவிலிருந்து பின்வாங்கினார்.

bhanuka Rajapaksa2

தற்போது ஐபிஎல் தொடரில் விளையாட தொடங்கியுள்ள அவர் பிட்னெஸ் என்ற அம்சத்திற்கு முன்னுதாரணமாக விளங்கும் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலியை கிரிக்கெட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ என பாராட்டியுள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அணிக்கு வெளியே விராட் கோலி என்பவர் எப்போதும் பிட்னஸ் பற்றிய அட்வைஸ் குறித்து பேசக்கூடிய ஒருவராக திகழ்கிறார். பிட்னெஸ் விஷயத்தில் அவர் வேறு ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளார்.

- Advertisement -

என்னைப் பொறுத்தவரை அவரை கிரிக்கெட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ என்று நிச்சயமாக கூறுவேன். தனது உடல் தகுதியில் அவர் காட்டும் அக்கறைக்கு ஈடான முடிவுகளை நாம் பார்க்கிறோம். எனவே பிட்னெஸ் அல்லது யுக்தி என வரும் போது உலகில் யாருடன் வேண்டுமானாலும் அவர் ஒப்பிட தகுதியானவர்கள். எப்போதும் கடினமாக விளையாட கூடியவராக இருக்கும் அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம்” என கூறினார்.

Kohli-3

பிட்னெஸ் கிங் கோலி:
ரசிகர்களால் கிங் என அழைக்கப்படும் விராட் கோலி கிரிக்கெட் போட்டிகளை தவிர்த்து எஞ்சிய நேரங்களை உடற்பயிற்சி கூடங்களில் செலவிட்டு பிட்னெஸ் எனும் அம்சத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக உருவெடுத்துள்ளார். அதன் உதவியுடன் பெரும்பாலும் காயத்தில் இருந்து விலகியிருக்கும் அவர் பல இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறார். சொல்லப்போனால் இன்று இந்திய அணியில் நல்ல உடல் தகுதியுடன் இருந்தால் மட்டுமே இடம் என்ற ஒரு நிலைமை உருவாவதற்கு அவர்தான் காரணம் என்றே கூறலாம்.

- Advertisement -

ஏனெனில் கடந்த 2014 – 2021 வரை இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட அவர் இந்திய அணியில் விளையாடும் அனைவரும் நல்ல உடல் தகுதியுடன் இருக்கவேண்டும் என கண்டிப்பான நிலைமையை உருவாக்கி நல்ல உடல் தகுதியுடன் கூடிய இந்திய அணி உருவாவதற்கு முக்கிய பங்காற்றினார். கால்பந்து உலகில் அபார திறமையாலும் அற்புதமான பிட்னஸ் காரணமாக முடிசூடா மன்னனாக விளங்கும் நட்சத்திர ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவை இந்த உலகமே கொண்டாடுகிறது.

இதையும் படிங்க : இந்தாண்டு ஐ.பி.எல் தொடரில் பிளேஆப் சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் இவைதான் – சுரேஷ் ரெய்னா கணிப்பு

அந்த வகையில் அவரைப் போலவே திறமை மற்றும் ஃபிட்னஸ் விஷயத்தில் அக்கறை காட்டும் விராட் கோலி தம்மை பொறுத்த வரை கிரிக்கெட்டின் ரொனால்டோ என இலங்கை வீரர் பனுக்கா ராஜபக்சே பாராட்டியுள்ளார். எனவே விராட் கோலியிடம் பிட்னஸ் பற்றிய ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டு வருங்காலங்களில் நல்ல உடல் தகுதியுடன் இலங்கை அணிக்கு மீண்டும் விளையாட முயற்சிக்க உள்ளதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement