இந்தாண்டு ஐ.பி.எல் தொடரில் பிளேஆப் சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் இவைதான் – சுரேஷ் ரெய்னா கணிப்பு

Raina
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 26-ஆம் தேதி தொடங்கிய பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது தற்போது முதல் வாரத்தில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் சமமான அணிகளாக திகழ்வதால் ஒவ்வொரு போட்டியை ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. அதோடு அனைத்து அணிகளிலும் உள்ள வீரர்களில் மாற்றம் நடைபெற்று உள்ளதால் ஒவ்வொரு போட்டியிலுமே வீரர்கள் மாறிமாறி தங்களது திறனை வெளிக்காட்டி வருகின்றனர்.

IPL 2022 (2)

- Advertisement -

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடர் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில் தற்போது சென்னை அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா இந்த ஐபிஎல் தொடரில் பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெறும் நான்கு அணிகள் எவை என்பது குறித்து தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

சென்னை அணிக்காக ஆரம்ப காலத்திலிருந்தே மேட்ச் வின்னராக விளையாடி வந்த சுரேஷ் ரெய்னா இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து கழற்றிவிடப்பட்டார். மேலும் அடிப்படை விலையாக இரண்டு கோடி ரூபாய் பதிவு செய்திருந்த அவரை ஏலத்தின் போது எந்த அணியும் கண்டுகொள்ளவில்லை. இதன் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாமல் போனது.

MI vs DC IPL 2022

அதனைத் தொடர்ந்து வர்ணனையாளர் அவதாரம் எடுத்துள்ள சுரேஷ் ரெய்னா தற்போது இந்த ஐபிஎல் தொடரில் சுற்றுக்கு தகுதி பெறும் நான்கு அணிகள் குறித்து கூறுகையில் : இந்த தொடரில் அனைத்து அணிகளுமே சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. ஏதோ ஒரு வகையில் அனைத்து அணிகளுமே திறமைமிக்க அணிகளாக தான் இருக்கிறது.

- Advertisement -

இருப்பினும் அனைத்து அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியாது. என்னை பொறுத்தவரை நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் டூபிளெஸ்ஸிஸ் தலைமையிலான பெங்களூர் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : மீண்டும் ஐபிஎல் தொடருக்கு திரும்பும் கிறிஸ் கெயில், எப்போ தெரியுமா? – அவரே பகிர்ந்த தகவல்

சுரேஷ் ரெய்னா இப்படி ஒரு கருத்தை கூறியிருந்தாலும் 10 அணிகளும் ஒன்றுக்கு ஒன்று குறைச்சல் இல்லாத அளவிற்கு தற்போது இந்த தொடரானது படு சுவாரஸ்யமாக சென்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதோடு 5 முறை ஐ.பி.எல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெறாது என்று ரெய்னா கணித்திருப்பது சற்று வினோதமாகத்தான் உள்ளது.

Advertisement