உங்க கோவத்தை அவர்மேலயா காமிப்பீங்க? களத்தில் மோசமாக நடந்து கொண்ட சாம் கரனை – விமர்சிக்கும் ரசிகர்கள்

Sam-Curran
- Advertisement -

நடப்பு 2023-ஆம் ஆண்டுக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 13-ஆவது லீக் போட்டியானது நேற்று டெல்லி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணியானது இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த உலகக் கோப்பையில் ஏதாவது ஒரு சிறிய அணி பெரிய அணியை வீழ்த்தும் என்று பலரும் பேசி வந்த வேளையில் ஆப்கானிஸ்தான அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தியது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் சுருண்டு விடும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிரடியான ஆட்டத்தை கையில் எடுத்தனர்.

- Advertisement -

குறிப்பாக துவக்க வீரர்கள் முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் குவித்து நல்ல அடித்தளத்தை அமைத்து தர பின்னர் முதலாவது விக்கெட் 114 ரன்களில் தான் விழுந்தது. பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் ஓரளவு சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆப்கானிஸ்தான் அணி இறுதியில் 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்களை மட்டுமே குவித்தது.

பின்னர் 285 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்த சிறிய டெல்லி மைதானத்தில் எளிதாக சேசிங் செய்து விடும் என்று பலரும் நினைத்த வேளையில் ஆப்கானிஸ்தான் அணியின் சிறப்பான சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 40.3 ஓவர்களில் 215 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது இங்கிலாந்து அணியின் வீரரான சாம் கரன் செய்த ஒரு மோசமான செயல் ஒன்று தற்போது இணையத்தில் ரசிகர்கள் அதிக அளவில் விமர்சிக்கப்படும் விடயமாக மாறியுள்ளது. அந்த வகையில் இந்த போட்டியின் போது மொத்தம் 4 ஓவர்களை வீசிய அவர் 46 ரன்கள் விட்டுக் கொடுத்து மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தார். அதிலும் குறிப்பாக குர்பாசுக்கு எதிராக 9-ஆவது வரை வீசிய அவர் இரண்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 20 ரன்கள் குவித்து மோசமாக பந்துவீசி இருந்தார்.

பின்னர் அதற்கு அடுத்த ஓவரில் பவுண்டரி லைன் அருகே நின்று கொண்டிருந்த அவர் தனது மோசமான பந்துவீச்சை நினைத்து சற்று அதிருப்தியில் இருந்தார். அவ்வேளையில் பவுண்டரி லைனின் அருகில் இருந்த கேமராமேன் ஒருவர் அதனை படம் பிடிக்க முயன்றார். ஏற்கனவே ரன்கள் கசிந்த வருத்தத்தில் இருந்த சாம் கரன் தனது கோபத்தை கேமரா மேன் மீது காட்டினார்.

இதையும் படிங்க : ரோஹித் சர்மா 31, பாகிஸ்தான் 0, ஆஸி 29, தெ.ஆ 18.. பவர்ப்ளே கில்லியாக மிரட்டும் ஹிட்மேன்.. மாஸ் புள்ளிவிவரம்

அதாவது அவரை நெருக்கமாக படம் பிடிக்க சென்ற அந்த கேமராமேனை சாம் கரன் தனது கையால் தள்ளிவிட்டார். அவரது இந்த மோசமான செயல் தற்போது இணையத்தில் வீடியோவாகவும் வைரலாகி வருகிறது. மேலும் அவரது இந்த செயலுக்கு ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த போட்டியில் பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் 23 பந்துகளை சந்தித்த அவர் 10 ரன்களை மட்டுமே அடித்து ஏமாற்றம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement