ரோஹித் சர்மா 31, பாகிஸ்தான் 0, ஆஸி 29, தெ.ஆ 18.. பவர்ப்ளே கில்லியாக மிரட்டும் ஹிட்மேன்.. மாஸ் புள்ளிவிவரம்

Rohit Sharma 5
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 1983, 2011 ஆகிய வருடங்களை தொடர்ந்து 3வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 3 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து அசத்தியுள்ளது. குறிப்பாக வலுவான ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை தோற்கடித்துள்ள இந்தியா புள்ளி பட்டியலில் முதலிடத்திற்க் முன்னேறியுள்ளது.

அதிலும் குறிப்பாக பரம எதிரி பாகிஸ்தானை 191 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா அதை 117 பந்துகள் மீதம் வைத்து அபார வெற்றி பெற்றது. அதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 8வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா தங்களுடைய வெற்றி சரித்திரத்தை தக்க வைத்து சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் பயணத்தில் வீர நடை போட்டு வருகிறது.

- Advertisement -

ரோஹித்தின் சரவெடி:
முன்னதாக 2011 உலகக் கோப்பையில் இடம் பெறாத ரோகித் சர்மா தம்முடைய கடுமையான உழைப்பால் முன்னேறி இன்று இந்தியாவை சொந்த மண்ணில் கேப்டனாக வழி நடத்தி வருகிறார். அதில் கடந்த உலக கோப்பையில் 5 சதங்கள் அடித்து உலக சாதனை படைத்த அவர் இந்த தொடரில் கடந்த 2 போட்டிகளில் முறையே 131, 86 ரன்கள் விளாசி நிறைய உலக சாதனைகளை படைக்க இந்தியாவின் வெற்றி பங்காற்றி வருகிறார்.

குறிப்பாக இந்த 2 போட்டிகளில் சேர்த்து இதுவரை மொத்தம் 11 சிக்ஸர்கள் அடித்துள்ள அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்தார். அதுபோக உலகக்கோப்பையில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கர் மற்றும் அதிவேகமாக சதமடித்த இந்திய வீரர் என்ற கபில் தேவ் ஆல் டைம் சாதனையை உடைத்த அவர் புதிய வரலாறு படைத்தார்.

- Advertisement -

அதை விட இந்த 2023 காலண்டர் வருடத்தில் இதுவரை நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் 16 இன்னிங்ஸில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா அதில் பவர் பிளே ஓவர்களில் மட்டும் 452 பந்துகளை எதிர்கொண்டு 31 சிக்சர்கள் அடித்துள்ளார். உலகில் வேறு எந்த பேட்ஸ்மேனும் இந்த வருடம் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட்டின் பவர் பிளே ஓவர்களில் இவ்வளவு சிக்சர்கள் அடித்ததில்லை.

இதையும் படிங்க: ஆப்கானிஸ்தானை பாக்காம பிட்ச் பாத்து தப்பு பண்ணிடீங்க.. இங்கிலாந்தின் தவறை சுட்டிக்காட்டிய சச்சின்

சொல்லப்போனால் இதே பட்டியலில் ஆஸ்திரேலியா அணி மொத்தமாக 780 பந்துகளில் 29 சிக்சர்களும் தென்னாப்பிரிக்கா 840 பந்துகளில் 18 சிக்ஸர்கள் மட்டுமே அடித்துள்ளன. அதை விட இதே பட்டியலில் பாகிஸ்தான் இந்த வருடம் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் 18 இன்னிங்ஸில் விளையாடி இதுவரை பவர் பிளே ஓவர்களில் பெயருக்காக 1 சிக்சர்கள் கூட அடிக்கவில்லை. அந்த வகையில் பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற அணிகளை விட ரோகித் சர்மா தனி ஒருவனாக பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement