ஆப்கானிஸ்தானை பாக்காம பிட்ச் பாத்து தப்பு பண்ணிடீங்க.. இங்கிலாந்தின் தவறை சுட்டிக்காட்டிய சச்சின்

Sachin Tendulkar 2
- Advertisement -

இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 15ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 13வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் வலுவான இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்தில் கத்துக்குட்டியாக கருதப்படும் ஆப்கானிஸ்தான் தோற்கடித்து தெறிக்க விட்டது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் முடிந்தளவுக்கு போராடி 49.5 ஓவரில் 284 ரன்கள் சேர்த்தது.

அதிகபட்சமாக துவக்க வீரர் ரஹ்மதுல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடி 80 (57) ரன்களும் இக்ரம் கில் 58 (66) ரன்களும் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக அடில் ரசித் 3 விக்கெட்களை சாய்த்தார். அதைத் தொடர்ந்து 285 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு ஜானி பேர்ஸ்டோ 2, டேவிட் மாலன் 32, ஜோ ரூட் 11, ஜோஸ் பட்லர் 9, சாம் கரண் 10, லியம் லிவிங்ஸ்டன் 10 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

இங்கிலாந்தின் தவறு:
அதனால் அதிகபட்சமாக இளம் வீரர் ஹாரி ப்ரூக் 66 ரன்கள் எடுத்தும் 40.3 ஓவரிலேயே இங்கிலாந்தை 215 ரன்களுக்கு சுருட்டிய ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முஜிப் உர் ரகுமான், ரசித் கான் தலா 3 விக்கெட்களையும் முகமது நபி 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக இங்கிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்து சரித்திரம் படைத்தது.

அத்துடன் உலகக்கோப்பை வரலாற்றில் 14 தொடர் தோல்விகளுக்கு பின் முதல் முறையாக ஒரு வெற்றியையும் பதிவு செய்து ஆப்கானிஸ்தான் அசத்தியது. குறிப்பாக முஜீப் ரசித் கான், முகமத் நபி ஆகிய 3 பேரும் இந்தியா உள்ளிட்ட உலகின் டாப் அணிகளுக்கு சவாலை கொடுக்கும் உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்களாக போற்றப்படுகிறார்கள். அந்தளவுக்கு தரம்மிக்க அவர்கள் ஒரு வழியாக ஒன்று சேர்ந்து இப்போட்டியில் அபாரமாக செயல்பட்டு இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளனர் என்று சொல்லலாம்.

- Advertisement -

இந்நிலையில் இப்போட்டியில் பந்து பிட்ச்சில் எப்படி சுழல்கிறது என்று பார்த்து விளையாடிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அது எப்படி ஆப்கானிஸ்தான் ஸ்பின்னர்களின் கைகளிலிருந்து சுழன்று வருகிறது என்பதை பார்க்காமல் விளையாடியதே தம்மை பொறுத்த வரை தோல்விக்கான காரணம் என்று ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: முதல் பந்திலேயே தெரிஞ்சிபோச்சி. ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான தோல்வி குறித்து – ஜாஸ் பட்லர் பேட்டி

“ஆப்கானிஸ்தான் அணியிடமிருந்து அற்புதமான ஆல் ரவுண்ட் செயல்பாடுகள் வெளிப்பட்டது. குறிப்பாக ரஹ்மத்துல்லா குர்பாஸ் திடமான இன்னிங்ஸ் விளையாடினார். இங்கிலாந்துக்கு இது மோசமான நாள். எப்போதுமே தரமான ஸ்பின்னர்களின் பந்துகளை நீங்கள் அவர்களுடைய கைகளில் இருந்து பார்க்க படிக்க வேண்டும். ஆனால் அதை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் செய்ய தவறினார்கள். மாறாக அவர்கள் அதை பிட்ச்சில் படித்தார்கள். அதுவே அவர்களுடைய வீழ்ச்சிக்கு காரணம் என்று நான் கருதுகிறேன். களத்தில் சிறந்த எனர்ஜியுடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் சிறப்பாக விளையாடியது” என்று பாராட்டியுள்ளார்.

Advertisement