முதல் பந்திலேயே தெரிஞ்சிபோச்சி. ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான தோல்வி குறித்து – ஜாஸ் பட்லர் பேட்டி

Buttler
- Advertisement -

டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் அக்டோபர் 15-ஆம் தேதி நடைபெற்று முடிந்த நடப்பு 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 13-வது லீக் ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மாபெரும் வெற்றியை ருசித்தது. அவர்கள் பெற்ற இந்த வெற்றி பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்ற வேளையில் இங்கிலாந்து அணி இந்த தொடரில் இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது. அதன்படி இன்று நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சை சிறப்பாக எதிர் கொண்டு 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்கள் குவித்தது. பின்னர் 285 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியானது இந்த போட்டியில் வெற்றி பெறும் என்று பலரும் நினைத்திருந்த வேளையில் ஆப்கானிஸ்தான் அணி அவர்களுக்கு அதிர்ச்சி அளித்து 40.3 ஓவர்களிலேயே அவர்களை 215 ரன்களுக்கு சுருட்டி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

உலகக்கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனாக பயணத்தை துவங்கிய இங்கிலாந்து அணி இப்படி கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தான் அணி இடம் தோல்வியை சந்தித்தது பலரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும் ஆப்கானிஸ்தான் அணிக்கு இது ஒரு சாதனை வெற்றியாக அமைந்தது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் இந்த தோல்வி குறித்து பேசுகையில் :

இந்த போட்டியில் நாங்கள் டாசில் வெற்றி பெற்று தோல்வியை சந்தித்துள்ளது வருத்தம் அளிக்கிறது. இந்த போட்டியின் ஆரம்பத்திலேயே முதல் பந்திலேயே உதிரி ரன்களை வழங்கியது அந்த அணிக்கு ஒரு முமென்ட்டத்தை தந்தது. அதோடு ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் இன்றைய போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த போட்டியில் நாங்கள் செய்ய நினைத்ததை தவறியதாக நினைக்கிறேன்.

- Advertisement -

அதேபோன்று பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே நாங்கள் மோசமாக செயல்பட்டதில் மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணியில் சில பந்துவீச்சாளர்கள் அற்புதமாக செயல்பட்டனர். இன்றைய போட்டியில் டியூ வராததால் நாங்கள் நினைத்த அளவு எங்களால் ரன் குவிப்பை வேகப்படுத்த முடியவில்லை. பந்து நேராக ஸ்டம்பிற்கு வந்ததால் எங்களால் பெரிய அளவு அதிரடியான ஆட்டத்தை விளையாட முடியவில்லை.

இதையும் படிங்க : இந்த வெற்றியும், எனது ஆட்டநாயகன் விருதையும் முழுக்க முழுக்க அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன் – முஜிபுர் ரஹ்மான் நெகிழ்ச்சி

இன்றைய போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஒரு அணியாக நாங்கள் இதுபோன்ற செயல்பாட்டை வெளிப்படுத்தியதில் ஏமாற்றம் அடைகிறேன். இருப்பினும் நாங்கள் வலுவாக மீண்டுவர இது போன்ற ஒரு போட்டி எங்களுக்கு பாடமாக இருக்கும். நிச்சயம் இந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு இந்த தொடரில் மீண்டும் பலமாக வருவோம் என ஜாஸ் பட்லர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement