இந்த வெற்றியும், எனது ஆட்டநாயகன் விருதையும் முழுக்க முழுக்க அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன் – முஜிபுர் ரஹ்மான் நெகிழ்ச்சி

Mujeeb-ur-Rahman
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே அக்டோபர் 15-ஆம் தேதி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற 13-வது 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 13-ஆவது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆப்கானிஸ்தான் அணியானது 69 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. அதே வேளையில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி தங்களது இரண்டாவது தோல்வியை பதிவு செய்துள்ளது.

அதன்படி நடைபெற்று முடிந்த இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்களை மட்டுமே குவித்தது.

- Advertisement -

ஆப்கானிஸ்தானின் சார்பாக துவக்க வீரர் குர்பாஸ் 80 ரன்களையும், இக்ரம் 58 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 285 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியானது 40.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்கள் மட்டுமே குவிக்க 69 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பாக பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்ட முஜிபுர் ரகுமான் 10 ஓவர்கள் வீசி 1 மெய்டன் உட்பட 51 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய முஜிபுர் ரகுமான் கூறுகையில் : உலகக் கோப்பை போட்டியின் போது சாம்பியன் அணியான இங்கிலாந்து அணியை வீழ்த்தியதில் மிகவும் பெருமையாக நினைக்கிறேன்.

- Advertisement -

இது ஒரு ஒட்டுமொத்த அணியுமே பெரிய பெருமை அடைய கூட ஒரு சாதனை. நாங்கள் மிகப்பெரிய அணியை வீழ்த்தியுள்ளோம். இந்த போட்டியில் எங்களது பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் என அனைவருமே மிகச் சிறப்பாக செயல்பட்டனர். அதோடு இன்றைய போட்டியில் என்னுடைய பங்களிப்பும் இருந்ததில் மிகவும் மகிழ்ச்சி. வலைப்பயிற்சியில் நான் மிகவும் கடினமாக உழைக்கிறேன். அதன் காரணமாக புதுப்பந்தில் என்னால் தொடர்ச்சியாக சிறப்பாக பந்து வீச முடிகிறது. அதோடு இந்திய இன்றைய போட்டியில் நான் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் உன்னிப்பாக இருந்தேன்.

இதையும் படிங்க : 280 அடிச்சதுமே தெரிஞ்சு போச்சு.. இதோட நிக்க மாட்டோம்.. சரித்திர வெற்றிக்கு ஆப்கன் கேப்டன் பேட்டி

அதேபோன்று போட்டியின் பிற்பகுதியில் டியூ வருவதால் நான் பவர்பிளே ஓவர்களிலேயே பந்து வீசி வருகிறேன். இன்றைய போட்டியில் நான் எங்களது அணிக்காக மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கி வெற்றியில் பங்களித்ததில் மகிழ்ச்சி. எனக்கு கிடைத்த இந்த ஆட்டநாயகன் விருதினை எங்களது நாட்டில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அர்ப்பணிக்கிறேன். இந்த வெற்றி அவர்களுக்காக மட்டுமே தான் என முஜிபுர் ரஹ்மான் நெகிழ்ச்சியுடன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement