- Advertisement -
ஐ.பி.எல்

எஞ்சியுள்ள ஐ.பி.எல் தொடருக்கு அவங்க 2 பேரும் வரமாட்டாங்க.. தெளிவான தகவலை கூறிய – காசி விஸ்வநாதன்

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் கலந்துகொண்ட சி.எஸ்.கே அணியானது ஆரம்பகட்ட போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து பெரிய பின்னடைவை எதிர்கொண்டது. அதன்பின்னர் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக இந்த தொடரின் பாதியிலேயே எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து வெளியேறினார்.

எஞ்சியுள்ள போட்டிகளுக்கு 2 வீரர்கள் வரமாட்டார்கள் : சி.எஸ்.கே நிர்வாகம்

அதனை தொடர்ந்து மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்ற மகேந்திர சிங் தோனி சென்னை அணியை தோல்வியின் பிடியில் இருந்து மீட்டெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவரது தலைமையின் கீழ் சென்னை அணி அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து இந்த தொடரில் இருந்து வெளியேறி உள்ளது.

- Advertisement -

தற்போதைக்கு 12 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 9 தோல்விகளை பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தினை பிடித்து பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ள வேளையில் இன்னும் சென்னை அணிக்கு இரண்டு ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.

இந்நிலையில் சென்னை அணிக்கு எஞ்சியுள்ள இரண்டு லீக் ஆட்டங்களிலும் இங்கிலாந்து அணியை சேர்ந்த ஜேமி ஓவர்டன் மற்றும் சாம் கரன் ஆகியோர் விளையாட மாட்டார்கள் என்று அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. குறித்து பேசிய சென்னை அணியின் மூத்த அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில் :

- Advertisement -

இந்த ஆண்டு எஞ்சியுள்ள ஐபிஎல் தொடரில் சாம் கரண் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோர் அவர்களது தேசிய அணிக்காக விளையாட இருப்பதினால் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிக்காக இந்தியாவிற்கு விளையாட வர மாட்டார்கள் என தெரிவித்துள்ளார். அவரது இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினால் அவர்கள் இருவரும் இங்கு வரமாட்டார்கள் என்பது உறுதியாகி உள்ளது.

இதையும் படிங்க : ஆஸியில் சொதப்பிய விராட், ரோஹித் இதை செய்யாம போனது சோகமா இருக்கு.. ஆரோன் பின்ச் பேட்டி

அதேவேளையில் மற்ற வெளிநாட்டு வீரர்களான மதீஷா பதிரானா, நூர் அகமது, டேவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இந்தியாவிற்கு திரும்பி உள்ளனர். சாம் கரன் மற்றம் ஜேமி ஓவர்டன் ஆகியோர் அணியிலிருந்து வெளியேறினாலும் மாற்றுவீரர்கள் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -