ரொம்ப கஷ்டம்.. இங்கயே திணறும் அவர் எப்படி 2023 உ.கோ தொடரில் அசத்துவாரு – இந்திய பவுலர் பற்றி சல்மான் பட் பேட்டி

Salman Butt 2
- Advertisement -

ஐசிசி 2023 உலகக் கோப்பையை வென்று சரித்திரம் படைப்பதற்காக 2023 ஆசிய கோப்பையில் மும்மரமாக விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் சிறப்பாக செயல்பட்டு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. முன்னதாக அறிவிக்கப்பட்ட உலகக் கோப்பை இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகிய 3 ஸ்பின்னர்கள் தேர்வு செய்யப்பட்டது சில விமர்சனங்களை ஏற்படுத்தியது. அதாவது அந்த 3 பேருமே இடது கை அல்லது லெக் ஸ்பின்னர்களாக இருப்பதால் எதிரணியில் இருக்கும் இடது வீரர்களை திணறடிக்க அஸ்வின் போன்ற ஆஃப் ஸ்பின்னர் தேவை என சில முன்னாள் வீரர்கள் தெரிவித்தனர்.

அந்த நிலையில் ரவிந்திர ஜடேஜா முதன்மையான சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக நல்ல ஃபார்மில் இருப்பதுடன் வெற்றியை பறிக்கும் திறமை கொண்டவர் என்பதால் நிச்சயமாக உலகக் கோப்பையில் விளையாட தகுதியுடையவர். அதே போல குல்தீப் யாதவ் நடைபெற்று வரும் ஆசிய கோப்பையில் பெரிய விக்கெட்டுகளை எடுத்து இந்தியா ஃபைனல் செல்வதற்கு முக்கிய பங்காற்றி சூப்பரான ஃபார்மில் இருக்கிறார்.

- Advertisement -

இங்கயே திணறல்:
ஆனால் நல்ல பேட்டிங் திறமை கொண்ட அக்சர் படேல் இந்த ஆசிய கோப்பையில் பந்து வீச்சில் தடுமாற்றமாகவே செயல்பட்டு வருகிறார். குறிப்பாக சூப்பர் 4 சுற்றில் இலங்கையின் 20 வயது ஸ்பின்னர் வெல்லாலகே டாப் 5 இந்திய வீரர்களை அவுட்டாக்கும் அளவுக்கு சுழலுக்கு சாதகமாக இருந்த கொழும்பு மைதானத்தில் 5 ஓவர்களை வீசிய அவர் பெரிய அளவில் பந்தை சுழற்றாமல் தடுமாறியதுடன் எந்த விக்கெட்டுகளையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் சர்துள் தாக்கூருக்கு பதிலாக தேர்வான அக்சர் படேல் சுழலுக்கு சாதகமான மைதானத்திலேயே பந்தை சுழற்றுவதற்கு தடுமாறியதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். எனவே ஒரு இடத்தை வீணடிக்காமல் ஜடேஜா மற்றும் குல்தீப்பை மட்டும் ஸ்பின்னர்களாக இந்தியா பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரது பவுலிங் அளவுக்கு அக்சர் பட்டேல் இல்லை. அவரின் பேட்டிங் சிறப்பாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இது போன்ற சுழலுக்கு சாதகமான மைதானத்திலேயே சுழற்றாத அவர் வேறு எங்கே பந்தை சுழற்றப் போகிறார். ஏனெனில் அசலங்கா கூட அந்த பிட்ச்சில் 4 விக்கெட்டுகளை எடுத்தார். ஆனால் அக்சர் படேல் பந்தை சுழற்ற முடியாமல் தடுமாறியது இந்திய அணிக்கு கவலைக்குரிய அம்சமாகும்”

இதையும் படிங்க: கிறிஸ் கெயில் பற்றி தெரியும்ல.. அவங்கள குறைச்சு எடை போடாதீங்க.. 2023 உ.கோ எதிரணிகளை எச்சரித்த ஜோ ரூட்

“மறுபுறம் குல்தீப் பந்தை காற்றில் கொடுத்தார். அவரும் ஜடேஜாவும் நன்கு ரிலீஸ் செய்வதாலேயே வெற்றிகரமாக செயல்படுகின்றனர்” என்று கூறினார். இந்த நிலைமையில் ரவீந்திர ஜடேஜா நல்ல ஃபார்மில் இருப்பதால் உலகக் கோப்பையின் போது விளையாடும் 11 பேர் இந்திய அணியில் அக்சர் பட்டேல் நேரடியாக வாய்ப்பு பெறுவது கடினமாகவே பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement