கிறிஸ் கெயில் பற்றி தெரியும்ல.. அவங்கள குறைச்சு எடை போடாதீங்க.. 2023 உ.கோ எதிரணிகளை எச்சரித்த ஜோ ரூட்

Joe Root
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக நடைபெறும் ஐசிசி 2023 உலகக் கோப்பையில் 2011 போல சொந்த மண்ணில் சாம்பியன் பட்டம் இந்தியாவில் வெல்வதற்கு பேட்டிங் துறையின் இரு துருவங்களாக போற்றப்படும் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறப்பாக செயல்படுவது அவசியம் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் கடந்த 10 வருடங்களாக ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக பெரும்பாலான போட்டிகளில் எதிரணி பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு வரும் அவர்கள் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்கள்.

அந்த வரிசையில் நடைபெற்று வரும் 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட அவர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக 122* ரன்கள் விளாசிய விராட் கோலி அதிவேகமாக 13,000 ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் உலக சாதனையை படைத்து வெற்றியில் பங்காற்றி தன்னை சாம்பியன் வீரர் என்பதை நிரூபித்து வருகிறார். அதே போல சமீப காலங்களில் தடுமாறிய ரோகித் சர்மாவும் நிறைய விமர்சனங்களை சந்தித்து வந்தார்.

- Advertisement -

ரூட் பாராட்டு:
இருப்பினும் இத்தொடரில் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான போட்டிகளில் 50க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்கள் அடித்த 2வது வீரர் என்ற உலக சாதனையை படைத்த இந்தியாவின் வெற்றியில் பங்காற்றி வருகிறார். ஆனாலும் அழுத்தமான ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் கைவிடுவதால் காலம் கடந்த இந்த சீனியர்களை கழற்றி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று ஒரு பக்கம் விமர்சனங்கள் காணப்படுகின்றன.

இந்நிலையில் கிறிஸ் கெயில், ஜேம்ஸ் ஆண்டர்சன் போல அதிக வயதில் அனுபவத்தால் அசத்தும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரை குறைத்து மதிப்பிடுவது எதிரணிகளுக்கு ஆபத்தானது என ஜோ ரூட் எச்சரித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டில் அவர் பேசியது பின்வருமாறு. “அதிக வயது காரணமாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற வீரர்களை முடிந்து விட்டார்கள் என்று எழுதுவது மிகவும் ஆபத்தானது என கருதுகிறேன்”

- Advertisement -

“எடுத்துக்காட்டாக டி20 கிரிக்கெட்டில் கிறிஸ் கெயில் எவ்வளவு நீண்ட காலம் விளையாடினார் என்பதை பாருங்கள். உலகில் நிறைய சிறந்த வீரர்கள் குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி செயல்பாடுகளில் அசத்தியுள்ளனர். எனவே நீங்கள் நன்றாக ஃபிட்டாக இருக்கும் வரை தொடர்ந்து விளையாடலாம். இதற்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றொரு எடுத்துக்காட்டாவார்”

இதையும் படிங்க: உலகின் சிறந்த பவுலிங் அட்டாக்கிற்கு இந்த நிலையா? இந்தியா அடிச்ச அடில எங்க பவுலர்கள் சிதைஞ்சுட்டாங்க – பாக் கோச் பேட்டி

“குறிப்பாக 40 வயதிலும் சிறப்பாக செயல்படும் அவரை அதிக வயதாகி விட்டார் என்பதற்காக நாங்கள் நீக்க முடியாது. ஏனெனில் இப்போதும் அவர் தான் எங்களுடைய பவுலிங் அட்டாக்கின் தலைவராக இருக்கிறார். நாங்கள் அவருடைய நுணுக்கம் மற்றும் அனுபவத்தை பயன்படுத்திக் கொள்வதை சாதகமாக பார்க்கிறோம்” என்று கூறினார். அந்த வகையில் நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த விராட் மற்றும் ரோகித் ஆகியோர் ஓய்வு பெறும் வரை இந்தியாவுக்காக விளையாடுவார்கள் என்று நம்பலாம்.

Advertisement