ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறும் முக்கியமான சூப்பர் 4 போட்டியில் நடப்பு சாம்பியன் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. அதில் இரு அணிகளுமே சூப்பர் 4 புள்ளி பட்டியலில் தலா 2 புள்ளிகளை பெற்றிருப்பதால் வெற்றி பெறும் அணி செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும் ஃபைனலில் இந்தியாவுடன் மோதுவதற்கு தகுதி பெறும் என்பதால் அனைவரிடமும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சொல்லப்போனால் அவ்விரு அணிகளில் பாகிஸ்தானை விட அதிக ரன் ரேட் கொண்டுள்ள இலங்கை தற்சமயத்தில் ஃபைனல் செல்ல அதிக வாய்ப்பு காணப்படுகிறது.
இந்தியாவுக்கு எதிரான தங்களுடைய கடைசி போட்டியில் 228 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்ததே பாகிஸ்தானின் இந்த பரிதாப நிலைமைக்கு காரணமாகும். ஆரம்பம் முதலே இந்த தொடரில் இந்தியாவை எளிதாக தோற்கடிப்போம் என்று அந்நாட்டு முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் எகத்தாளமாக பேசி வந்த நிலையில் லீக் சுற்றில் ஷாஹீன் அப்ரிடி போன்ற பவுலர்களுக்கு எதிராக விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற இந்திய முதுகெலும்பு பேட்ஸ்மேன்கள் திண்டாட்டினார்கள்.
இந்தியா சிதைச்சுட்டாங்க:
அதனால் 66/4 என தடுமாறிய இந்தியாவை இசான் கிசான் ஹர்திக் பாண்டியா காப்பாற்றிய நிலையில் மழை வந்தது போட்டியை நிறுத்தியது. இருப்பினும் சூப்பர் 4 சுற்றில் அதே பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்ட ரோகித் சர்மா 56, கில் 58, விராட் கோலி 122*, கேஎல் ராகுல் 111* ரன்கள் விளாசி 356/2 ரன்கள் எடுக்க உதவியதால் வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்து ஃபைனலுக்கு தகுதி பெற்றது.
இந்நிலையில் அந்த போட்டியில் நாசீம் ஷா, ஹரிஷ் ரவூப் ஆகியோர் காயத்தை சந்தித்து வெளியேறியது இலங்கைக்கு எதிரான போட்டியில் பின்னடைவாக மாறியுள்ளதாக தெரிவிக்கும் பாகிஸ்தான் பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கெல் இதர பவுலர்களையும் இந்திய பேட்ஸ்மேன்கள் மனதால் உடையும் அளவுக்கு அடித்ததாக கூறியுள்ளார். அந்த வகையில் இந்தியாவுக்கு பாராட்டையும் தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு பின் நாங்கள் பெரிய ஏமாற்றத்தை சந்தித்தோம். என்னைப் பொறுத்த வரை தற்சமயத்தில் எங்களின் பந்து வீச்சாளர்கள் சற்று சுயமாக சிந்திக்க வேண்டியது மிகவும் முக்கியம். குறிப்பாக வெற்றிக்கான கடினமான கேள்விகளை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். இந்த சமயத்தில் இந்திய பேட்ஸ்மேன்களையும் நான் பாராட்ட வேண்டும். ஏனெனில் அவர்கள் ஆரம்பத்திலேயே எங்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கினர்”
இதையும் படிங்க: இந்த ஆசிய கோப்பை தொடர்லயே நம்ம பசங்க யாருனு காட்டிட்டாங்க – சச்சின் டெண்டுல்கர் பாராட்டு
“இது உலக கோப்பைக்கு முன்பாக எங்களுக்கு நல்ல பாடமாகும். நாசீம் ஷா காயத்தால் வெளியேறியது நிச்சயம் பெரிய பின்னடைவாகும். இந்தியாவிடம் தோல்வியை சந்தித்ததால் நாங்கள் இலங்கைக்கு எதிராக நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதில் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு தங்களுடைய கேரக்டரை காட்டுவார்கள் என்று நம்புகிறேன். இதிலிருந்து நாங்கள் இன்னும் வலுவாக கம்பேக் கொடுக்க முயற்சிப்போம்” என கூறினார்.