இந்த ஆசிய கோப்பை தொடர்லயே நம்ம பசங்க யாருனு காட்டிட்டாங்க – சச்சின் டெண்டுல்கர் பாராட்டு

Sachin
- Advertisement -

கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி துவங்கிய 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதி ஆட்டமானது செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள வேளையில் இந்திய அணியானது இந்த இறுதிப் போட்டியில் விளையாட ஏற்கனவே தகுதி பெற்றுள்ளது. மேலும் இந்திய அணியுடன் இறுதிப்போட்டியில் விளையாடப்போவது யார் என்று விரைவில் தெரிந்து விடும்.

அதோடு இந்திய அணிக்கு எதிராக எந்த அணி மோதினாலும் வெற்றி பெறப்போவது இந்தியா தான் என ரசிகர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

அப்பாடி அவர் பகிர்ந்துள்ள அந்த பதிவில் : தற்போது இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாடி வரும் விதம் மிகவும் சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டி உள்ளார். மேலும் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணிக்கு இது ஒரு மிகப்பெரிய பாசிட்டிவான விஷயமாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஏனெனில் இந்த ஆசிய கோப்பை தொடரில் ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, கே.எல் ராகுல், இஷான் கிஷன், ஹார்திக் பாண்டியா என அனைவருமே வெவ்வேறு சூழ்நிலைகளில் இந்திய அணிக்காக ரன்களை குவித்துள்ளனர்.

- Advertisement -

இதனை இந்திய அணி தொடர்ந்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் பகிர்ந்த இந்த கருத்து போன்றே இந்த தொடரில் இந்திய வீரர்கள் விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் சதங்களையும், அவர்களை தவிர்த்து மற்ற அனைவரும் அரைசதம் அடித்து அசத்தியுள்ளனர்.

இதையும் படிங்க : இந்தியாவிடம் வாங்கிய அடியால்.. இலங்கைக்கு எதிரான வாழ்வா – சாவா போட்டியில் 5 மாற்றம்.. புதிதாக மாறிய பாகிஸ்தான் அணி

எதிர்வரும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக இப்படி அனைத்து வீரர்களுமே ரன்களை குவித்துள்ளது இந்திய அணிக்கு மிகப்பெரிய பாசிட்டிவான விடயம் என்பதே நிதர்சனமான உண்மை.

Advertisement