இந்தியாவிடம் வாங்கிய அடியால்.. இலங்கைக்கு எதிரான வாழ்வா – சாவா போட்டியில் 5 மாற்றம்.. புதிதாக மாறிய பாகிஸ்தான் அணி

SL vs PAK
- Advertisement -

ஆசிய கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிப்பதற்காக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் அசத்திய இந்தியா முதல் அணியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. அதே போல சூப்பர் 4 சுற்றில் தலா 1 வெற்றி தோல்வியை பதிவு செய்த நடப்பு சாம்பியன் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஃபைனலுக்கு தகுதி பெற செப்டம்பர் 14ஆம் தேதி இன்று மதியம் 3 மணிக்கு நடைபெறும் முக்கியமான போட்டியில் வெற்றியை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்விரு அணிகளை பொறுத்தவரை இந்தியாவுக்கு எதிராக 228 ரன்கள் வித்தியாசத்தில் மெகா தோல்வியை சந்தித்ததால் பாகிஸ்தானின் ரன் ரேட் படுமோசமாக இருக்கிறது. அதனால் இந்த போட்டியில் இலங்கையை பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தால் தான் ஃபைனலுக்கு செல்ல முடியும் என்ற நிலைமையில் பாகிஸ்தான் இருக்கிறது. மறுபுறம் சாதாரண வெற்றியை பதிவு செய்தால் போதும் என்ற நிலைமையில் இருக்கும் இலங்கைக்கு ஒருவேளை போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால் ரன்ரேட் காரணமாக ஃபைனலுக்கு 100% தகுதி பெற வாய்ப்புள்ளது.

- Advertisement -

5 மாற்றங்கள்:
அப்படி வாழ்வா – சாவா என்ற வகையில் நடைபெறும் இந்த போட்டியில் நிச்சயம் வெற்றியை காண்பதற்காக பாகிஸ்தான் தங்களுடைய 11 பேர் அணியில் 5 அதிரடியான மாற்றங்களை செய்துள்ளது. அதில் ஹரிஷ் ரவூப், நாசீம் ஷா ஆகியோர் இந்தியாவுக்கு எதிரான கடந்த போட்டியில் காயத்தை சந்தித்ததால் அவர்களுக்கு பதிலாக முகமது வாசிம் மற்றும் ஜமான் கான் ஆகியோர் தேர்வு செய்யப்படுவதாக பாகிஸ்தான் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதை விட பேட்டிங்கில் தொடர்ந்து ஏமாற்றமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் துவக்க வீரர் ஃபகார் ஜமான் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஏமாற்றத்தை கொடுத்ததால் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடக்கூடிய மற்றொரு தொடக்க வீரர் முகமது ஹாரிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

இவர் 2023 வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பையை பாகிஸ்தானுக்கு கேப்டனாக வென்றவர். அதேபோல மிடில் ஆர்டரில் திண்டாட்டமாக செயல்பட்டு பெரிய ஏமாற்றத்தை கொடுத்த சல்மான் ஆகா அதிரடியாக நீக்கப்பட்டு சௌத் ஷாகீல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மொத்தத்தில் இந்தியாவிடம் வாங்கிய அடியால் 5 மாற்றங்களை பாகிஸ்தான் செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பேசுகின்றனர்.

இதையும் படிங்க: தோனி இல்ல.. டெத் ஓவரில் அவர் தான் மிரட்டலான இந்திய கேப்டன்னு கிங் கோலியே சொன்னாரு – அஸ்வின் வியப்பான பேட்டி

அந்த அணியின் பட்டியல்: பாபர் அசாம் (கேப்டன்), முகமது ஹாரிஸ், இமாம்-உல்-ஹக், சவுத் ஷாக்கீல், முகமது ரிஸ்வான், இப்திகார் அகமது, சடாப் கான் (துணை கேப்டன்), முகமது நவாஸ், சாகின் அப்ரிடி, முகமது வாசிம், ஜமான் கான்

Advertisement