சூரியகுமார் யாதவ் மட்டும் பாகிஸ்தானில் பிறந்திருந்தால் இப்படி விளையாடி இருக்கமாட்டாரு – சல்மான் பட் கருத்து

Salman-Butt-and-SKY
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரின் கடைசி போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற வேளையில் அந்த ஆட்டத்தில் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளை சந்தித்து 9 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரி என 112 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமழக்காமல் இருந்து இந்திய அணியை பெரிய ரன் குவிப்புக்கு அழைத்துச் சென்றார்.

Suryakumar Yadav 2

- Advertisement -

அவரது பிரமாதமான ஆட்டம் காரணமாக இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதோடு 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரையும் கைப்பற்றியது. இந்த இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் அவரே அறிவிக்கப்பட்டார். இந்திய அணிக்காக தனது 30-வது வயதில் அறிமுகமான சூரியகுமார் யாதவ் 2 ஆண்டுகளுக்கு உள்ளாகவே 45 டி20 போட்டிகளில் விளையாடி 1578 ரன்கள் குவித்துள்ளார்.

ஏற்கனவே சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு சதத்தை விளாசியிருந்த அவர் இலங்கைக்கு எதிராக அடித்த இந்த சதத்தின் மூலம் மூன்று சதங்களை அடித்த ஒரே மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இந்நிலையில் சூரியகுமார் யாதவ் மட்டும் பாகிஸ்தானில் பிறந்திருந்தால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கவே மாட்டார் என்று பாகிஸ்தான அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட் தெரிவித்துள்ளார்.

Suryakumar Yadav 1

இது குறித்து அவர் கூறுகையில் : சூர்யகுமார் யாதவ் 30 வயதுக்கு மேல் தான் இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமானார் என்று அனைத்து செய்திகளிலும் படித்திருக்கிறேன். நல்லவேளை அவர் இந்தியாவில் பிறந்து விட்டார். இதே ஒருவேளை அவர் பாகிஸ்தானியராக இருந்திருந்தால் நிச்சயம் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி இருக்கவே மாட்டார்.

- Advertisement -

ஏனெனில் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாக தலைவராக இருந்த ரமீஸ் ராஜா முப்பது வயதிற்கு மேல் எந்த ஒரு வீரரையும் அறிமுகப்படுத்த முடியாது என்ற விதிமுறையை அமல்படுத்தியிருந்தார். இப்படி பாக் நிர்வாகம் எடுத்துள்ள இந்த முடிவினை குறிப்பிட்டு பாகிஸ்தான் அணியின் நிர்வாகத்தை கடுமையாக சாடியுள்ளார்.

இதையும் படிங்க : அந்த 2 திறமை ஏபிடி, ரசல் கிட்ட கூட இல்ல, சூரியகுமார் தான் பெஸ்ட் – அஜய் ஜடேஜா பாராட்டும் காரணம் இதோ

சூரியகுமார் யாதவ் 30 வயதிற்கு மேல் அறிமுகமாகி இருந்தாலும் இரண்டே ஆண்டுகளில் மிகச் சிறப்பாக விளையாடி தற்போது உலகின் நம்பர் ஒன் டி20 வீரராக இருப்பது மட்டுமின்றி மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடிக்கும் 360 வீரராகவும் ரசிகர்கள் மத்தியில் பெரிய புகழோடு உச்சத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement