அந்த 2 திறமை ஏபிடி, ரசல் கிட்ட கூட இல்ல, சூரியகுமார் தான் பெஸ்ட் – அஜய் ஜடேஜா பாராட்டும் காரணம் இதோ

Suryakumar Ajay Jadeja
- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் இந்திய கிரிக்கெட் அணி தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதையும் உலகின் நம்பர் ஒன் டி20 அணி என்பதையும் நிரூபித்து 2024 டி20 உலக கோப்பைக்கு தயாராகும் பயணத்தை வெற்றியுடன் துவங்கியுள்ளது. குறிப்பாக முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 வெற்றியை பதிவு செய்ததால் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்க ராஜ்கோட் நகரில் நடைபெற்ற 3வது போட்டியில் அட்டகாசமாக பேட்டிங் செய்த சூரியகுமார் யாதவ் தன்னுடைய 3வது சதமடித்து 112* (51) ரன்களை விளாசி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

SUryakumar Yadav 112

- Advertisement -

முன்னதாக தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் கடந்த ஒன்றரை வருடங்களை இதர வீரர்களை காட்டிலும் அட்டகாசமாக செயல்பட்டு அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்று டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் லேட்டஸ்ட் மேட்ச் வின்னர் அவதரித்துள்ள அவர் குறுகிய காலத்திலேயே ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாகவும் முன்னேறி சாதனை படைத்துள்ளார். குறிப்பாக களமிறங்கிய முதல் பந்திலிருந்தே எதிரணி எப்படி பந்து வீசினாலும் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் பெரும்பாலான போட்டிகளில் மைதானத்தின் நாலாபுறங்களிலும் அடித்து நொறுக்கும் அவர் இப்போட்டியில் அதை சற்று அதிகமாகவே செய்தார் என்று சொல்லலாம்.

ஏபிடி, ரசலை மிஞ்சிட்டாரு:
ஏனெனில் முகத்துக்கு நேராக புல் டாஸாக வந்த ஒரு பந்தை கொஞ்சமும் பயப்படாமல் அப்படியே முட்டி போட்டு விக்கெட் கீப்பர் தலைக்கு மேல் சிக்ஸர் பறக்க விட்டு அவர் மேலும் சில சிக்ஸர்களை விழுந்து விழுந்து விக்கெட் கீப்பர் தலைக்கு மேல் சிக்ஸர்களாக தெறிக்க விட்டார். அப்போதெல்லாம் ஏராளமான குட்டிக்கரணம் அடித்தும் காயங்களை சந்திக்காத அவர் மைதானத்தின் இதர திசைகளிலும் அடித்து நொறுக்கி தன்னை இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்தார்.

AB DE villiers Suryakumar Yadav

இந்நிலையில் ஏபி டீ வில்லியர்ஸ் அதிக பவருடன் அனைத்து புறங்களிலும் அடித்து நொறுக்கினாலும் சூரியகுமார் அளவுக்கு தொடர்ச்சியாக பெரும்பாலான போட்டிகளில் இந்தளவுக்கு அசத்தலாக பேட்டிங் செய்ததில்லை என்று முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பாராட்டியுள்ளார். அதே சமயம் அண்ட்ரே ரசல் போல் முரட்டுத்தனமாக விளையாடமலேயே அவரை விட அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் சூரியகுமார் விளையாடுவதாகவும் அவர் பாராட்டியுள்ளார். அந்த வகையில் டி20 கிரிக்கெட்டில் சூரியகுமார் மிகச்சிறந்த வீரர் என்று பாராட்டும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இது போல பேட்டிங் செய்வதில் ஏபி டீ வில்லியர்ஸ் மிகச் சிறந்தவராக நாம் பார்த்துள்ளோம். அதில் சந்தேகமும் இல்லை. ஆனால் தொடர்ச்சியாக இதே போல பேட்டிங் செய்வதில் சூரியகுமார் சற்று அதிகமாக அசத்துகிறார். ஏபிடி தன்னுடைய ஆட்டத்தில் அதிக பவரை கொண்டிருந்தார். ஆனால் தனது மணிக்கட்டை பயன்படுத்தி சூரியகுமார் விளையாடும் விதம் ஏபிடியிடம் இருந்ததில்லை. சூரியகுமார் இந்தளவுக்கு அனைத்து திசைகளிலும் அடிப்பதற்கு அவருடைய மணிக்கட்டு தான் காரணமாகும்”

Ajay

“அவருடைய மணிக்கட்டு ஏபிடியை விட மிகச் சிறப்பாக இருபுறங்களிலும் வேலை செய்கிறது. குறிப்பாக ஸ்வீப் அடிக்கும் போதும் அவர் தன்னுடைய முழுமையான கையையும் மணிக்கட்டையும் பயன்படுத்தி அடிக்கிறார். அவரை விட இந்த உலகில் சில அதிரடியான வீரர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக ஆண்ட்ரே ரசல் முரட்டுத்தனமாக அடிப்பதில் வல்லவர். ஆனால் சூரியகுமார் அவரை விட தொடர்ச்சியாகவும் அதிக ஸ்ட்ரைக் ரேட்டிலும் விளையாடுகிறார். அவர் டைமிங் கொடுப்பதிலும் அசத்துகிறார். குறிப்பாக அவர் பந்தை விட எதிரணியிடம் விளையாடுகிறார்”

இதையும் படிங்க: என்னால டீமுக்கு இந்த விஷயம் நடந்தா ஹேப்பி தான். தொடர் நாயகன் – அக்சர் பட்டேல் நெகிழ்ச்சி

“அதாவது எதிரணி பவுலர் என்ன நினைப்பார், எதிரணியின் பீல்டிங் எப்படி உள்ளது என்பதற்கேற்றார் போல் அவர் விளையாடுகிறார். வரலாற்றில் சிறந்து விளங்கிய அனைத்து வீரர்களும் ஒரு கட்டத்தில் வேகம் குறைந்துள்ளார்கள் அல்லது அதிவேகத்தில் செயல்பட்டுள்ளார்கள். அந்த வகையில் இவரை கட்டுப்படுத்துவதற்கு எதிரணி வீசாத பந்துகளே இல்லை என்று சொல்லலாம். எனவே அடுத்து வரும் ஐபிஎல் தொடரில் அவரை கட்டுப்படுத்த புத்தகத்தில் இருக்கும் ஃபீல்டிங் முறைகளை நிறுத்தாமல் ஏதோ ஒரு வித்தியாசமான பீல்டிங்கை நிறுத்த எதிரணிகள் முயற்சிக்கும். அவர்களுக்கு அதைத் தவிர வேறு வழியும் இல்லை” என்று கூறினார்.

Advertisement