என்னால டீமுக்கு இந்த விஷயம் நடந்தா ஹேப்பி தான். தொடர் நாயகன் – அக்சர் பட்டேல் நெகிழ்ச்சி

Axar Patel and Hardik Patel
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது தற்போது நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த டி20 தொடரை இந்திய அணி (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. மேலும் இதனைத் தொடர்ந்து அடுத்ததாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது.

IND

- Advertisement -

இந்நிலையில் இந்த டி20 தொடரின் மூன்றாவது ஆட்டம் நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று முடிந்த வேளையில் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 228 ரன்களை குவித்தது. பின்னர் 229 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணியானது 137 ரன்கள் மட்டுமே குவித்ததால் 91 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் ஆட்டநாயகனாக சூரியகுமார் யாதவும், தொடர் நாயகனாக சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேலும் தேர்வு செய்யப்பட்டனர். ஜடேஜாவிற்கு பதிலாக இந்திய அணியில் இடம் பிடித்து வரும் அக்சர் பட்டேல் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடிய வருவதால் ஜடேஜாவின் இடத்தை எதிர்காலத்தில் இவரே பூர்த்தி செய்வார் என்று பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

axar patel

இந்நிலையில் இந்த தொடரில் தான் விளையாடிய விதம் குறித்து பேசியுள்ள அக்சர் பட்டேல் கூறுகையில் : இந்த வெற்றியில் எனது பங்களிப்பும் இருப்பதில் மகிழ்ச்சி. நான் பவுலிங்கை விட பேட்டிங்கில் மிகச் சிறப்பாக விளையாடி வருவது அணிக்கு கூடுதல் பலத்தை அளிக்கும் என்று நினைக்கிறேன். அதே போன்று பந்துவீச்சிலும் நான் அதிக கவனம் செலுத்தி வருகிறேன்.

- Advertisement -

நான் ஒரு சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்பதனால் பந்துவீச்சையும் தாண்டி பேட்டிங்கில் எனது பங்களிப்பை வழங்குவதில் மிகவும் மகிழ்ச்சி. இந்திய அணியில் நான் விளையாடும் போது கேப்டன்கள் எனக்கு கொடுக்கும் தன்னம்பிக்கையும், தைரியமும் என்னை சிறப்பாக செயல்பட வைக்கிறது.

இதையும் படிங்க : நல்லவேளை நாங்க ஒரே டீம்ல ஆடுறோம். சூரியகுமார் யாதவ் அதிரடியால் பயந்து பேசிய – யுஸ்வேந்திர சாஹல்

அந்த வகையில் இந்த தொடரிலும் என்னை அணியின் நிர்வாகமும், கேப்டனும் ஆதரித்தனால் என்னுடைய திட்டம் போட்டியின் போது தெளிவாக இருந்தது மட்டுமின்றி நான் சுதந்திரமாகவும் விளையாடுவதால் என்னால் சிறப்பாக செயல்பட முடிகிறது என தொடர்நாயகன் அக்சர் பட்டேல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement