நல்லவேளை நாங்க ஒரே டீம்ல ஆடுறோம். சூரியகுமார் யாதவ் அதிரடியால் பயந்து பேசிய – யுஸ்வேந்திர சாஹல்

Chahal
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகித்த வேளையில் நேற்று ராஜ்கோட் மைதானத்தில் முக்கியமான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டியானது விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

IND vs SL

- Advertisement -

இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் குவித்தது. பின்னர் 229 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணியானது 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் 91 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் 51 பந்துகளை சந்தித்து 9 சிக்ஸர்கள் மற்றும் ஏழு பவுண்டரி என 112 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது அதிரடியான ஆட்டம் பார்ப்பதற்கு மிகச் சிறப்பாக இருந்தாலும் இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களை மனதளவில் நோகடித்தது என்றே கூறலாம்.

Suryakumar Yadav 1

அந்த அளவிற்கு தான் சந்திக்கும் பந்துகளை எல்லாம் பவுண்டரியை நோக்கி அவர் துரத்திக் கொண்டிருந்தார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து சூரியகுமார் யாதவியின் சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாகல் கூறுகையில் :

- Advertisement -

முதல் போட்டி முடிந்ததுமே நான் பயிற்சியாளர்களிடம் சென்று சூரியகுமார் யாதவுக்கு எதிராக எந்த லைனில் எந்த வேகத்தில் பந்து வீசலாம் என்று கேட்டேன். ஏனெனில் தற்போது சூரியகுமார் யாதவ் வேற லெவலில் பேட்டிங் செய்து வருகிறார். அவர் பேட்டிங் செய்யும் விதத்தை பார்க்கும்போது ஒரு பவுலராக எனக்கு பயம் ஏற்படுகிறது. நல்ல வேலை நாங்கள் இருவரும் ஒரே அணியில் விளையாடுகிறோம்.

இதையும் படிங்க : தெ.ஆ தொடரை வென்று அச்சுறுத்தும் ஆஸி – டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் செல்ல இந்தியாவுக்கு உள்ள 3 கடைசி வாய்ப்புகள் என்ன

சூரியகுமார் யாதவ் போன்ற ஒரு கிளீன் ஹிட்டருக்கு எதிராக பந்து வீசுவது மிகவும் கடினம். நிச்சயம் பந்துவீச்சாளர்கள் அவருக்கு எதிராக பந்துவீசும் போது கஷ்டப்படுகிறார்கள் என்று தனது கருத்தினை அவர் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement