தெ.ஆ தொடரை வென்று அச்சுறுத்தும் ஆஸி – டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் செல்ல இந்தியாவுக்கு உள்ள 3 கடைசி வாய்ப்புகள் என்ன

AUs vs IND
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா முதலிரண்டு போட்டிகளிலேயே அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவி விட்டது. குறிப்பாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற அத்தொடரில் ஆரம்பத்திலே சந்தித்த தோல்வியால் புள்ளி பட்டியலில் 2வது இடத்திலிருந்த அந்த அணி 5வது இடத்திற்கு சரிந்தது. மறுபுறம் சரிவை பயன்படுத்தி வங்கதேச தொடரை வென்ற இந்தியா 4வது இடத்திலிருந்து 2வது இடத்திற்கு முன்னேறி ஃபைனல் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

அந்த நிலையில் ஜனவரி 4ஆம் தேதியன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய அத்தொடரின் கடைசி போட்டியில் மழையின் உதவியால் தோல்வியிலிருந்து தப்பிய தென்னாப்பிரிக்கா டிரா செய்தது. அதனால் 2 – 0 (3) என்ற கணக்கில் சொந்த மண்ணில் நடைபெற்ற அத்தொடரை வென்ற ஆஸ்திரேலியா தொடர்ந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 75.56% புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. அதனால் அந்த அணி ஃபைனல் செல்வது உறுதியானாலும் அது வரும் பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை வெற்றியை பொறுத்து அமைய உள்ளது.

- Advertisement -

இந்தியாவின் கடைசி சோதனை:
மறுபுறம் கடந்த வருடம் ஃபைனல் வரை முன்னேறி நியூசிலாந்திடம் தோற்றுக் கோப்பையை கோட்டை விட்ட இந்தியா இம்முறை மீண்டும் பைனலுக்கு தகுதி பெற வரும் பிப்ரவரியில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் 4 போட்டிகள் டெஸ்ட் தொடரை வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதற்கு 58.93% புள்ளிகளுடன் தற்போது 2வது இடத்தில் இருக்கும் இந்தியாவுக்கு போட்டியாக 3 மற்றும் 4வது இடங்களில் உள்ள இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் உள்ளன.

1. எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் தொடரை 3 – 0 அல்லது 3 – 1 என்ற கணக்கில் இந்தியா வெல்லும் பட்சத்தில் எந்தவித குழப்பமும் இல்லாமல் யாரையும் நம்பாமல் நேரடியாக ஜூன் மாதம் லண்டன் ஓவரில் நடைபெறும் பைனலுக்கு தகுதி பெற்று விடலாம்.

- Advertisement -

2. ஒருவேளை ஆஸ்திரேலியாவிடம் 2 – 2 சமன் செய்யும் பட்சத்தில் அல்லது 2 – 1 அல்லது 2 – 0 என்ற கணக்கில் இந்தியா வெல்லும் பட்சத்தில் ஏற்கனவே பைனல் வாய்ப்பை இழந்த நியூசிலாந்தின் கையை எதிர்பார்க்க வேண்டும். அதாவது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 போட்டிகளை மட்டும் வெல்லும் பட்சத்தில் விரைவில் சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து 2 – 0 (2) அல்லது 1 – 0 (2) என்ற கணக்கில் வெல்ல வேண்டும். அல்லது குறைந்தபட்சம் நிச்சயம் 1 – 1 (2) என்ற கணக்கில் டிரா செய்ய வேண்டும்.

3. ஒருவேளை ஆஸ்திரேலியா தற்போது இருக்கும் பார்முக்கு சொந்த மண்ணில் நடைபெறும் இத்தொடரில் 2 – 1 (4) என்ற கணக்கில் இந்தியா தோற்கும் பட்சத்திலும் பைனலுக்கு செல்ல முடியும். ஆனால் அதற்கு விரைவில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 2 – 0 (2) அல்லது 1 – 0 (2) என்ற கணக்கில் வெல்ல வேண்டும். அல்லது குறைந்தபட்சம் நிச்சயம் 1 – 1 (2) என்ற கணக்கில் டிரா செய்ய வேண்டும்.

- Advertisement -

அதே சமயம் இலங்கைக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து குறைந்தபட்சம் 1 வெற்றியை பெற வேண்டும். ஒருவேளை ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோற்று நியூசிலாந்துக்கு எதிராக இலங்கையும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தென்னாப்பிரிக்காவும் தங்களது கடைசி தொடரில் வெல்லும் பட்சத்தில் அவ்விரு அணிகளில் அதிக வெற்றிகளை பதிவு செய்யும் அணிகள் பைனலுக்கு தகுதி பெறும். அந்த சூழ்நிலையில் தற்போது புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் இருக்கும் இலங்கைக்கு அதிக வாய்ப்புள்ளது. அது நடந்தால் இந்தியா பரிதாபமாக வெளியேறி விடும்.

இதையும் படிங்க: வீடியோ : மாயாஜால பேட்டிங் செய்த சூரியகுமாருக்கு ஸ்பெஷல் மெசேஜ் அனுப்பிய விராட் கோலி – அவருடைய அன்பு ரிப்ளை இதோ

இருப்பினும் சொந்த மண்ணில் எப்போதும் வலுவான அணியாக திகழும் இந்தியா 2004க்குப்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் 2012க்குப்பின் எந்த அணிக்கு எதிராகவும் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்றதில்லை. எனவே 2023 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியா பைனலுக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது நடந்தால் பைனலில் மீண்டும் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வதற்கு 90% வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement