இந்திய அணியின் 4 ஆவது பேட்ஸ்மேனாக இவரே விளையாடனும். அதுதான் கரெக்ட் – சல்மான் பட் ஓபன்டாக்

Butt
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் முடிவடைந்த கையோடு இந்திய அணி தற்போது உலக கோப்பையில் பங்கேற்க பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய அணியை இன்று எதிர்கொள்ள உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்தே இந்திய அணியின் வீரர்கள் குறித்த பல்வேறு விவாதங்கள் சமூகவலைதளத்தில் நடைபெற்று வருகின்றன.

IND

- Advertisement -

அந்த வகையில் தற்போது இந்திய அணியின் மிடில் ஆர்டரில் நான்காமிடத்தில் எந்த வீரர் விளையாடினால் சரியாக இருக்கும் என்பது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : சூரியகுமார் யாதவின் பேட்டில் ப்ளோ இலங்கை தொடரில் இருந்தது போன்று இல்லை.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் கூட அவரது ஆட்டம் சற்று மோசமாகவே இருந்தது. ஆனால் அவரைக் காட்டிலும் இஷான் கிஷன் அந்த தொடரில் சிறப்பாக விளையாடினார். அதுமட்டுமின்றி பயிற்சி போட்டியிலும் அவர் ஆட்டம் பிரமிப்பாக இருந்ததால் நிச்சயம் அவரால் ஆட்டத்தை மாற்றக்கூடிய ஒரு இன்னிங்ஸ் விளையாட முடியும். எனவே இந்திய அணி 4-வது இடத்திற்கு தற்போதுள்ள நிலையில் அவர் சரியாக இருப்பார்.

ishan
ishan MI

அதுமட்டுமின்றி ஏற்கனவே துவக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் ராகுல் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருவதால் விராட் கோலிக்கு அடுத்து இஷான் கிஷன் இந்திய அணியின் பேட்டிங் செய்யும் பட்சத்தில் நிச்சயம் அணி பலம் பெறும். மேலும் அதன் பிறகு ரிஷப் பண்ட் வருவதால் மிடில் ஆர்டரில் இரண்டு இடதுகை வீரர்கள் இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை தரும் எனவே என்னை பொறுத்தவரை சூரியகுமார் யாதவை காட்டிலும் இஷான் கிஷன் அந்த இடத்திற்கு சரியாக இருப்பார் என்று சல்மான் பட் கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : டிராவிடின் அந்த பதவி எனக்கு வேணாம். பி.சி.சி.ஐ -யின் ஆஃபரை நிராகரித்த – வி.வி.எஸ் லக்ஷ்மணன்

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்திய அணியின் பௌலிங் தற்போது சிறப்பாக உள்ளதால் அதை பற்றி பெரிய அளவில் யோசிக்க தேவையில்லை என்றும் பேட்டிங்கில் வலுசேர்க்கும் யூனிட்டை தேர்வு செய்தாக வேண்டும் எனவும் சல்மான் பட் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement