டிராவிடின் அந்த பதவி எனக்கு வேணாம். பி.சி.சி.ஐ -யின் ஆஃபரை நிராகரித்த – வி.வி.எஸ் லக்ஷ்மணன்

Laxman
- Advertisement -

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது செயல்பட்டு வரும் ரவிசாஸ்திரி நடைபெற்று வரும் இந்த உலகக் கோப்பை டி20 தொடர் முடிவடைந்த பின்னர் பதவியிலிருந்து விலக உள்ளார். மேலும் அவர் மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக தொடர விரும்பவில்லை என்று கூறியுள்ளதால் ஏற்கனவே பிசிசிஐ புதிய பயிற்சியாளருக்கான தேடலில் ஈடுபட்டிருந்தது. அதன்படி தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் கிட்டத்தட்ட இந்திய அணியின் பயிற்சியாளராக மாறுவது உறுதியாகியுள்ளது.

Dravid

- Advertisement -

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பயிற்சியாளராக செயல்பட இருக்கும் டிராவிட் 10 கோடி ரூபாய் சம்பளம் பெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த உலக கோப்பை தொடர் முடிவடைந்தவுடன் ரவிசாஸ்திரி பதவி விலகிய பிறகு புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் அதிகாரபூர்வமாக பதவி ஏற்க உள்ளார்.

இந்நிலையில் ராகுல் டிராவிட் பதவி வகித்து வரும் தேசிய கிரிக்கெட் அகாடெமியின் தலைவராக யாரை பொறுப்பேற்க சொல்வது ? என்பது குறித்து பிசிசிஐ தற்போது சில வீரர்களை அணுகி வருகிறது. பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தலைவராக ராகுல் டிராவிட் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட இருப்பதால் அவருடைய அந்த பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர்களே சரியாக இருப்பார்கள் என்று நினைத்து பிசிசிஐ சில வீரர்களிடம் ஆலோசனை நடத்தியது.

அதன்படி இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் பேட்ஸ்மேனான வி.வி.எஸ்.லட்சுமணனை அணுகியது. ஆனால் லக்ஷ்மணனோ அந்த வாய்ப்பு தேவையில்லை என்று மறுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் கிரிக்கெட் சார்ந்த பணிகளை செய்துவரும் லட்சுமணன் தற்போது பெங்கால் அணிக்காக ஆலோசகராகவும், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஆலோசகராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : சீனியர் வீரரின் மோசமான பார்ம். ஷர்துல் தாகூருக்கு பிரகாசமாகும் வாய்ப்பு – இந்திய அணியில் ஏற்படவுள்ள மாற்றம்

கிரிக்கெட்டில் ஏகப்பட்ட அனுபவம் கொண்ட இவர் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக சரியாக இருப்பார் என்று பிசிசிஐ எதிர்பார்த்த வேளையில் அவர் பிசிசிஐயின் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement