- Advertisement -
உலக கிரிக்கெட்

பாபர் அசாம் கிங் கோலி கிடையாது தான்.. ஆனா இந்தியா மாதிரி தோனி, ரோஹித் இருக்காங்களா? சல்மான் பட் ஆதரவு

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. வரலாற்றிலேயே முதல் முறையாக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் இந்தத் தொடரில் நடப்புச் சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தான் கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் முதல் போட்டியிலேயே நியூசிலாந்திடம் தோற்ற பாகிஸ்தான் பரம எதிரி இந்தியாவிடமும் போராடாமலேயே தோல்வியை சந்தித்தது.

அதன் காரணமாக கடைசிப் போட்டிக்கு முன்பே பாகிஸ்தான் தொடரிலிருந்து வெறும் 5 நாட்களில் பரிதாபமாக வெளியேறியது. அந்தத் தோல்விக்கு நம்பிக்கை நட்சத்திரம் பாபர் அசாம் சுமாராக விளையாடியது முக்கிய காரணமானது. அதனால் விராட் கோலி தான் கிரிக்கெட்டின் உண்மையான கிங் ஆனால் பாபர் அசாம் ஃபிராடு என சோயப் அக்தர், ஹபீஸ் போன்ற நிறைய முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

- Advertisement -

கோலி கிடையாது:

இந்நிலையில் பாபர் அசாம் விராட் கோலி கிடையாது தான் என்று மற்றொரு முன்னாள் வீரர் சல்மான் பட் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்காக இப்படி விமர்சிக்கும் அளவுக்கு பாபர் அசாம் மோசமானவர் கிடையாது என்றும் அவர் ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி சல்மான் பேசியது பின்வருமாறு. “டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 சதங்களை அடித்துள்ள பாபர் 26 அரை சதங்களுடன் 44.5 சராசரியை கொண்டுள்ளார்”

“ஒருநாள் கிரிக்கெட்டில் 19 சதங்கள் 32 அரை சதங்கள் அடித்துள்ள அவர் 56.72 சராசரியைக் கொண்டுள்ளார். டி20 129 ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் 41 சராசரியைக் கொண்டுள்ளார். இப்போது கடந்த 20 வருடங்களில் பாகிஸ்தானுக்காக விளையாடி பாபர் அசாமின் இந்தப் புள்ளி விவரங்களை முந்திய வீரர் இருந்தால் என்னிடம் சொல்லுங்கள். நீங்கள் கோலி அல்லது வில்லியம்சனாக இருக்க வேண்டியதில்லை”

- Advertisement -

ஆதரவு இல்லை:

“பாபர் விராட் கோலி கிடையாது. ஆனால் பாபர் நாம் கொண்டிருக்கும் சிறந்த பேட்ஸ்மேன். தற்போது ரன்கள் அடிக்க முடியவில்லையெனில் அவருக்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டும். அவர் நன்றாக விளையாடும் போது நீங்கள் விரும்பவில்லை என்றாலும் உலகுடன் சேர்ந்து பாராட்ட வேண்டும். விராட் கோலி கூட அவ்வப்போது ஃபார்மை இழக்கிறார்”

இதையும் படிங்க: ரோஹித் சர்மா ஓய்வெடுக்க இருப்பதால் அடுத்த போட்டியில் சுப்மன் கில்லிற்கு கிடைக்கவுள்ள – மாபெரும் கவுரவம்

“ஆனாலும் ஹை கிளாஸ் வீரரான விராட் கோலி முக்கியமான போட்டிகளில் 50 ரன்களை அடித்து விடுகிறார். விராட் கோலி தன்னுடன் யாரைக் கொண்டிருந்தார்? ரோகித் சர்மா, எம்எஸ் தோனி. அந்த வகையில் விராட் கோலியுடன் மேட்ச் வின்னர் இருந்தார்கள். ஆனால் பாபர் அசாமுடன் பாகிஸ்தான் அணியில் யார் இருக்கிறார்கள்?” என்று கூறினார். அதாவது பாபர் அசாமுக்கு ஆதரவு கொடுக்கும் அளவுக்கு பாகிஸ்தான் அணியில் நல்ல வீரர்கள் இல்லை என்று சல்மான் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -