இவ்ளோ நடந்தும் அதை செஞ்ச இந்தியா கெத்து தான், பாகிஸ்தான் கண்டிப்பா திண்டாடிருப்பாங்க – சல்மான் பட் பாராட்டு

Salman Butt
- Advertisement -

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 2ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய முக்கியமான லீக் போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா புள்ளி பகிர்ந்து கொடுக்கப்பட்டது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா எதிர்பார்த்தது போலவே பாகிஸ்தானின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் படிக்க முடியாமல் 48.5 ஓவரில் வெறும் 266 ரன்கள் மட்டுமே எடுத்தது.

குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பின்னடைவை கொடுத்தனர். அதனால் 66/4 என சரிந்த இந்தியாவை நல்லவேளையாக மிடில் ஆர்டரில் நங்கூரமாக நின்று சிறப்பாக விளையாடிய இஷான் கிசான் 82 ரன்களும் ஹர்டிக் பாண்டியா 87 ரன்களும் எடுத்து ஓரளவு அவமானத்திலிருந்து காப்பாற்றினார்கள்.

- Advertisement -

இந்தியா கெத்து தான்:
சொல்லப்போனால் ஆரம்பத்திலேயே அனலை தெறிக்க விட்ட பாகிஸ்தான் பவுலர்களுக்கு எதிராக விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற முதுகெலும்பு பேட்ஸ்மேன்கள் அவுட்டானதால் இந்தியா 150 ரன்கள் தாண்டுமா என்ற கவலை ரசிகர்களிடம் ஏற்பட்டது. ஆனால் கடைசியில் பார்த்தால் பலவீனமாக கருதப்பட்ட மிடில் ஆர்டரில் கிஷான் கிசான் மற்றும் பாண்டிய ஆகியோர் தான் சிறப்பாக விளையாடி 267 என்ற நல்ல இலக்கை நிர்ணயிக்க உதவினார்கள்.

அதனால் ஒருவேளை இப்போட்டியில் மழை வராமல் இருந்திருந்தால் பந்து வீச்சில் அசத்தியிருக்கும் பட்சத்தில் நிச்சயமாக இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என்றே சொல்லலாம். இந்நிலையில் இப்போட்டியில் விராட் மற்றும் ரோஹித் ஆகியோர் ஆரம்பத்திலேயே அவுட்டான போதிலும் இறுதியில் வெற்றிக்கு போராட தேவையான 270 ரன்கள் அடித்த இந்தியா சிறப்பாகவே செயல்பட்டதாக சல்மான் பட் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

அதனால் ஒருவேளை இந்தியாவும் சிறப்பாக பந்து வீசியிருக்கும் பட்சத்தில் பாகிஸ்தான் வெற்றி பெறுவதற்கு சிரமப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்திய அணியில் 2 – 3 வீரர்களை தவிர்த்து பெரும்பாலானவர்கள் அழுத்தமான போட்டியில் அசத்தும் அனுபவத்தை கொண்டிருக்கவில்லை என்று நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன். அந்த நிலையில் இந்த போட்டியில் விராட் மற்றும் ரோஹித் ஆகியோர் ஆரம்பத்திலேயே அவுட்டானது தான் மிகச் சிறந்த தருணமாகும்”

“ஏனெனில் அதன் காரணமாகவே இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி கம்பேக் கொடுப்பதற்கான வாய்ப்பை பெற்றனர். அவர்கள் இந்தியாவுக்கு நல்ல இலக்கை நிர்ணயிக்க உதவினார்கள். அதனால் அந்த இலக்கை பாகிஸ்தான் எளிதாக சேசிங் செய்திருக்கும் என்று நம்மால் சொல்ல முடியாது. மாறாக திரில்லர் போட்டியாக இருந்திருக்கலாம். குறிப்பாக ஒருவேளை பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் துறையில் இந்தியா அசத்தியிருக்கும் பட்சத்தில் பாகிஸ்தானின் வெற்றி கடினமாகியிருக்கும்”

இதையும் படிங்க: சென்னை 28 சிவா மாதிரி க்ளீன் போல்டாகிட்டாரு, ரோஹித் சர்மாவை ஓப்பனாக கலாய்த்த – முன்னாள் தமிழக வீரர், ரசிகர்கள் அதிருப்தி

“அந்த வகையில் இப்போட்டி இந்தியாவுக்கு நிறைய பயனை கொடுத்தது. இருப்பினும் அனைவரும் இங்கே ரோஹித் மற்றும் விராட் கோலி ஆரம்பத்திலேயே அவுட்டாகி விட்டதாக பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் அவுட்டாகியும் இந்தியா 270 ரன்கள் அடித்ததை பாருங்கள்” என்று கூறினார்.

Advertisement