தோனியின் கீழ் ஆஸி மாதிரி இருந்த இந்தியன் டீம், இப்போ 5 விக்கெட் விழுந்தா காலி – தற்போதைய நிலையை விமர்சித்த முன்னாள் பாக் வீரர்

MS dhoni India
- Advertisement -

சொந்த மண்ணில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நடைபெறும் 2023 உலக கோப்பையை வெல்வதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இறுதிக்கட்டமாக தயாராகி வருகிறது. அதனால் வெளிநாடுகளில் தடுமாறினாலும் சொந்த மண்ணில் வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தும் இந்தியா 2011 போல இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தியாவது கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்திக்கும் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இருப்பினும் பும்ராவை தவிர்த்து கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற முதன்மை வீரர்கள் இன்னும் காயத்திலிருந்து முழுமையாக குணமடையாமல் இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக இருந்து வருகிறது.

IND vs PAK World Cup

- Advertisement -

அதை விட பேட்டிங்கில் டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் ஆகிய இரண்டிலுமே மிகப்பெரிய பிரச்சனை இருக்கிறது என்று சொல்லலாம். முதலில் அழுத்தமான போட்டிகளில் வெற்றி காண்பதற்கு டாப் ஆர்டரில் விளையாடும் பேட்ஸ்மேன்கள் குறைந்தது 50 – 150 ரன்கள் எடுத்துக் கொடுப்பது அவசியமாகும். ஆனால் 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் துவங்கி 2019 உலகக்கோப்பை செமி ஃபைனல் வரை சமீப காலங்களாகவே முக்கியமான போட்டிகளில் இந்தியாவின் டாப் ஆர்டரில் விளையாடும் பேட்ஸ்மேன்கள் சொதப்புவது தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது.

தடுமாறும் இந்தியா:
குறிப்பாக அந்த இடங்களில் விளையாடும் நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான்களாக போற்றப்படும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அழுத்தமான போட்டிகளில் சொதப்புவதில் எந்த மாற்றத்தையும் காணவில்லை என்பது 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் தோல்வியில் மீண்டும் நிரூபணமானது. இரண்டவதாக அப்படி டாப் ஆர்டர் அனைத்து நேரங்களிலும் அசத்த முடியாது என்ற நிலைமையில் தாங்கிப் பிடிக்க வேண்டிய மிடில் ஆர்டரில் தரமான வீரர்கள் இல்லாதது மற்றொரு பிரச்சனையாக இருந்து வருகிறது.

IND Rohit Viat Kohli Bhuvanewar Kumar KL Rahul

அதாவது விராட், ரோஹித் ஆகியோர் அடிக்கும் பட்சத்தில் எளிதாக வெல்லும் இந்தியாவை ஒருவேளை அவர்கள் சொதப்பும் மிடில் ஆர்டரில் நங்கூரத்தை போட்டு தூக்கி நிறுத்தி காப்பாற்றும் அளவுக்கு தற்போதைய அணியில் தோனி, யுவராஜ் சிங் போன்ற பேட்ஸ்மேன்கள் இல்லை என்றே சொல்லலாம். இந்நிலையில் எம்எஸ் தோனி கேப்டனாக இருந்த வரை 2000ஆம் ஆண்டு வாக்கில் 5 விக்கெட்கள் இழந்தாலும் அப்படியே சரியாமல் போராடி வெற்றி கண்ட ஆஸ்திரேலியா போல இந்திய அணி இருந்ததாக தெரிவிக்கும் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் பட் இப்போது அந்த நிலைமை தலைகீழாக மாறியுள்ளதாக அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

அதே போலவே தங்களுடைய பாகிஸ்தான் அணியும் பலவீனமாகவே இருப்பதாக ஒப்புக்கொள்ளும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “தற்போது சோதனைகள் செய்வதற்கான நேரமில்லை. ஏனெனில் 2000ஆம் ஆண்டு காலகட்டங்களில் அதிகப்படியான சூரிய வெளிச்சத்தில் தாங்க முடியாத வெப்பத்தில் தடுமாறினாலும் ஆஸ்திரேலியாவை போன்ற அணியை அவர்கள் (இந்தியா – பாகிஸ்தான்) கொண்டிருக்கவில்லை”

Ponting-1

“ஒரு காலத்தில் ஆஸ்திரேலியர்கள் புதிய வீரர்களை களமிறக்கியும் பழைய வீரர்களை வைத்தும் வெற்றி கண்டனர். ஆனால் தற்போது இந்த 2 அணிகளுமே அந்தளவுக்கு தரத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதை அவர்கள் அறிவார்கள். ஒரு காலத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தங்களுடைய நாட்களில் எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருந்தனர். அந்த கோணத்தில் ஆஸ்திரேலியா உலகின் மற்ற அணிகளை காட்டிலும் பல மைல் தூரம் முன்னிலையில் இருந்தனர்”

- Advertisement -

“அதாவது ஆரம்பத்திலேயே 5 பேட்ஸ்மேன்களை இழந்தாலும் ஆஸ்திரேலியாவால் 275 – 300 ரன்கள் அடித்து வெற்றி காண முடிந்தது. அது ஒரு கனவு அணியாகும். ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தற்போது அது போன்ற கணவு அணியை கொண்டிருக்கவில்லை. இருப்பினும் தோனியின் தலைமையில் இந்தியாவின் பேட்டிங் அபாரமாக இருந்தது. ஆனால் தற்போது அவர்கள் தங்களுடைய செயல்பாடுகளை காட்ட வேண்டும்”

Rohit Sharma Salman Butt

இதையும் படிங்க:2023 உ.கோ : கங்குலி சொன்ன மாதிரி திலக் வர்மாவுக்கு அவசரப்பட்டு சான்ஸ் கொடுத்து வருத்தப்படாதீங்க – முன்னாள் செலக்டர் எச்சரிக்கை

“குறிப்பாக விராட் மற்றும் ரோஹித் ஆகியோர் பெரிய ரன்கள் அடிக்காமல் போனால் நல்ல பந்து வீச்சை கொண்டிருக்கும் எதிரணிக்கு எதிராக இந்தியா தடுமாறுகிறது. அதே போன்ற நிலைமையை கொண்டிருக்கும் பாகிஸ்தான் தங்களுடைய நாளில் பவுலிங்கில் மட்டும் சற்று வலுவான அணியாக இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement