இவரே கேப்டன் பதவியிலிருந்து தூக்குவாரம், அப்றம் இவரே இல்லனு சொல்வாரம் – கங்குலியை விளாசிய முன்னாள் பாக் வீரர்

Ganguly
- Advertisement -

இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப் போட்டியில் படுதோல்வியை சந்தித்த இந்தியா 2013க்குப்பின் தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் தோல்வியை சந்தித்து வெறும் கையுடன் நாடு திரும்பியது. அந்தப் போட்டியில் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருந்தும் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற கேப்டன் ரோகித் சர்மா அதை சரியாக பயன்படுத்தாமல் அஸ்வின் போன்ற வீரரை கழற்றி விட்டு தவறான அணியை தேர்ந்தெடுத்து சுமாராக கேப்டன்ஷிப் செய்து சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

அதன் காரணமாக பேசாமல் விராட் கோலியே கேப்டனாக இருந்திருக்கலாம் என்று நிறைய ரசிகர்களும் இயன் மோர்கன் போன்ற சில முன்னாள் வீரர்களும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். ஏனெனில் 2014இல் கேப்டனாக பொறுப்பேற்ற போது தரவரிசையில் 7வது இடத்தில் திண்டாடிய இந்தியாவை தனது ஆக்ரோஷம் நிறைந்த கேப்டன்ஷிப் வாயிலாக 2016 – 2021 வரை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்க வைத்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார்.

கங்குலியின் முரண்பாடு:
இருப்பினும் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியை போலவே இந்தியாவுக்காக ஒரு ஐசிசி கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்பதால் சந்தித்த விமர்சனங்களை நிறுத்த 2021 டி20 உலக கோப்பையுடன் டி20 கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்வதாக அறிவித்தார். ஆனால் அத்தொடரில் உலக கோப்பையில் முதல் முறையாக பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்ததால் அதிருப்தியடைந்த சௌரவ் கங்குலி தலைமையிலான பிசிசிஐ வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு 2 கேப்டன்கள் தேவையில்லை என்ற கருத்துடன் ஒருநாள் கேப்டன்ஷிப் பதவியையும் பறித்து 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோஹித் சர்மாவிடம் ஒப்படைத்தது.

Sourav Ganguly

அதனால் மனடைமுடைந்த விராட் கோலி வெற்றிகரமான ஆசிய டெஸ்ட் கேப்டனாக இருந்தும் பணிச்சுமையை காரணமாக காட்டி அந்த பதவியையும் துறந்தார். மறுபுறம் ரோஹித் சர்மா தலைமையில் 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பையில் தோற்ற இந்தியா தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் வெற்றி காண முடியாததால் பதவி விலக வேண்டுமென விமர்சனங்கள் எழுந்துள்ளன.

- Advertisement -

இருப்பினும் அதற்கு மத்தியில் ஐசிசி கோப்பையை விட கடினமான ஐபிஎல் தொடரில் 5 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள அனுபவமிக்க ரோகித் சர்மா 2023 உலக கோப்பையை வென்று கொடுப்பார் என்று நம்புவதாக ஆதரவு கொடுத்த கங்குலி 2022 ஜனவரியில் விராட் கோலி திடீரென்று டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியை ஏன் ராஜினாமா செய்தார் என்பது தமக்கு தெரியாது என்றும் அதை அவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

Butt

இந்நிலையில் விராட் கோலி பதவி விலக காரணமாக இருந்து விட்டு தற்போது அதன் பழியை அவர் மீதே போடும் சௌரவ் கங்குலி மகத்தான கேப்டனாக இருந்தும் ஐசிசி கோப்பையை விட ஐபிஎல் கோப்பை வெல்வது கடினம் என்று தெரிவித்தது ஏமாற்றத்தை கொடுப்பதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி வெற்றிகரமான கேப்டனாக இருந்தும் படிப்படியாக அந்த பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அவர் பதவி நீக்கம் செய்யப்படவில்லை தாமாக விலகினார் என்று சமீபத்தில் சில செய்திகளை படித்தேன்”

இதையும் படிங்க:வீடியோ : அடம் class=”bottom-line” பிடித்த தனது மகளுடன் வேறு வழியின்றி பேட்டி கொடுத்த கவாஜா – குழந்தையின் சேட்டையால் சிரித்த செய்தியாளர்கள்

“இருப்பினும் தேர்வுக்குழுவுக்கும் தமக்கும் சரியான தகவல் தொடர்பு இல்லாமல் இருந்தது என்பதை விராட் கோலியே சொன்ன வீடியோவை நீங்கள் பார்க்கவில்லையா? எனவே அவர் கேப்டனாக நீக்கப்பட்டு இருக்கக்கூடாது என்பதே என்னுடைய விருப்பமாகும். மேலும் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் மற்றும் கேப்டன் (கங்குலி) இப்படி சொல்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. உங்களால் எப்படி ஐபிஎல் தொடரை சர்வதேச கிரிக்கெட்டுடன் ஒப்பிட முடிகிறது? குறிப்பாக நீங்கள் வெறும் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டும் விளையாடும் ஒரு டி20 தொடரை கிரிக்கெட்டின் உயிர்நாடியான டெஸ்ட் போட்டிகளுடன் ஒப்பிடுவது சரியல்ல” என்று கூறினார்.

Advertisement