அதுல விராட் கோலி புத்திசாலித்தமான இருக்காரு ஆனா ரோஹித் சர்மா ரொம்ப மோசம் – சல்மான் பட் விமர்சனம்

Salman Butt
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2023 தொடரில் செப்டம்பர் 2ஆம் தேதி இலங்கையின் பல்லக்கேல் நகரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இத்தொடரில் பங்கேற்க இலங்கைக்கு செல்வதற்கு முன்பாக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியினருக்கு பெங்களூருவில் இருக்கும் என்சிஏவில் உடல் தகுதி சோதனை நடத்தப்பட்டது. குறிப்பாக கிரிக்கெட்டில் இருப்பதிலேயே மிகவும் கடினமான யோயோ சோதனையில் இந்திய வீரர்கள் அனைவரும் உட்படுத்தப்பட்டனர்.

அதில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 16.5க்கு 17.2 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்றதாக முதல் ஆளாக தம்முடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளினார். கடந்த பல வருடங்களாக உலக அரங்கில் ஃபிட்னஸ் எனும் வார்த்தைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக திகழும் அவரையே மிஞ்சிய இளம் தொடக்க வீரர் சுப்மன் கில் 18.7 மதிப்பெண்களைப் பெற்று இந்திய அணியிலேயே மிகவும் ஃபிட்டான வீரராக அசத்தினார்.

- Advertisement -

சுமாரான ரோஹித்:
மேலும் ரோகித் சர்மா உள்ளிட்ட இதர வீரர்கள் தேவையான மதிப்பெண்களை எடுத்து தேர்ச்சி பெற்றதை தொடர்ந்து இலங்கைக்கு சென்றதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் விராட் கோலி நினைத்திருந்தால் 19 போன்ற பெரிய யோயோ மதிப்பெண்களை எடுத்திருக்க முடியும் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் பட் கூறியுள்ளார். ஆனால் இந்த ஆசிய கோப்பையில் அசத்துவதற்காக தன்னுடைய எனர்ஜியை சேமித்து போதுமான மதிப்பெண்களை மட்டும் எடுத்த விராட் கோலி புத்திசாலித்தனமாக நடந்து கொண்டதாக அவர் பாராட்டியுள்ளார்.

அதே சமயம் யோயோ டெஸ்ட் மட்டும் ஒரு வீரர் அசத்துவதற்கு அவசியம் கிடையாது என்று தெரிவிக்கும் அவர் திறமையே முக்கியம் என கூறியுள்ளார். இருப்பினும் அதற்காக விராட் கோலியை விட அதிக திறமையை கொண்டுள்ள ரோகித் சர்மா ஃபிட்னெஸ்க்கு எப்போதுமே முன்னுரிமை கொடுக்காமல் சுமாரான உடல் தகுதியை பின்பற்றி வருவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“விராட் கோலி போன்ற வீரர்கள் குறிப்பிட்ட வயது எட்டிய பின் தங்களுடைய லிமிட் என்ன என்பதை நன்றாக அறிவார்கள். அதாவது சீனியர்கள் அந்த சோதனையில் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதும் என்று நினைத்து அதிகமாக முயற்சிக்க மாட்டார்கள். ஆனால் இளம் வீரர்கள் பயமறியாத காளையாக பயிற்சிகளை செய்வார்கள், கிரிக்கெட்டில் யோயோ டெஸ்ட் மட்டும் அடிப்படை கிடையாது. குறிப்பாக விராட் கோலியின் உழைப்பு மற்றும் நெறிமுறையை பாருங்கள்”

இதையும் படிங்க: அவங்ககிட்ட தடவல் பேட்டிங்கை வெச்சு ஜெயிக்க முடியாது – இந்திய தொடக்க வீரர்களுக்கு கம்பீர் கொடுத்த மாஸ் ஆலோசனை என்ன?

“குறிப்பாக கடந்த டி20 உலகக் கோப்பையில் ஹரிஷ் ரவூப்க்கு எதிராக அவர் எந்த மாதிரியான ஷாட்டை அடித்தார் என்று பாருங்கள். ஆனால் ரோகித் சர்மா போதியளவு கடினமாக உழைக்கவில்லை. அவர் மிகச் சிறந்த திறமைசாலி. ஆனால் அவர் தன்னுடைய உடல் தகுதியை கவனிப்பதில்லை. அதற்கு எடுத்துக்காட்டாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரின் தோற்றத்தை நீங்கள் பார்த்தாலே நன்றாக புரிந்து கொள்ளலாம்” என்று கூறினார்.

Advertisement