- Advertisement -
ஆசிய கோப்பை

இந்தியா செஞ்சது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல.. பாகிஸ்தான் செஞ்சத்தில் எந்த பிரச்சனையுமில்ல.. சல்மான் பேட்டி

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி செப்டம்பர் 28ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. அந்த இறுதிப்போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் வரலாற்றில் முதல் முறையாக மோதுகின்றன. அந்தப் போட்டியில் விளையாடி கோப்பையை வெல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முன்னதாக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் இயற்கை எய்தினர்.

அதற்கு பதிலடியாக இத்தொடரில் லீக் போட்டியின் முடிவில் கை கொடுக்க வந்த பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணியினர் கைகுலுக்கவில்லை. அதனால் அடுத்து நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில் அரை சதமடித்த பாகிஸ்தான் வீரர் ஃபர்கான் இந்தியாவை துப்பாக்கியால் சுடுவது போல் பேட்டை வைத்து கொண்டாடினார். மேலும் 6 இந்திய விமானங்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது என்ற போலியான கருத்தை ஹரிஷ் ரவூப் சைவையில் செய்து காட்டி இந்தியாவை கலாய்த்தார்.

- Advertisement -

இந்தியா செஞ்சது தப்பு:

அதற்கு 2022 டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி உங்களை அடித்து நொறுக்கியது மறந்து விட்டதா? என்று இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர். அத்துடன் கடைசியாக விளையாடிய 7 போட்டிகளிலும் 7 தோல்விகளை சந்தித்ததை மறக்காதீர்கள் என்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்களுக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர். இந்நிலையில் இந்திய அணி தங்களுடன் கைகுலுக்காமல் வெளியேறியது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என்று பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா கூறியுள்ளார்.

அதே சமயம் ஃபர்ஹான், ஹரிஷ் ரவூப் போன்ற பாகிஸ்தான் வீரர்கள் செய்த செய்கைகளால் பிரச்சனையில்லை என்றும் அவர் ஒருதலைபட்சமாக பேசியுள்ளார். இது பற்றி ஃபைனலுக்கு முன் அவர் பேசியது பின்வருமாறு. “2007 முதல் நான் 16 வயதிலிருந்தே தொழில்முறை கிரிக்கெட்டில் விளையாடி வருகிறேன். ஆனால் ஒரு போட்டியில் இரு அணிகளும் கைகுலுக்கிக் கொள்ளாத நிகழ்வை நான் எப்போதும் பார்த்ததில்லை”

- Advertisement -

பாகிஸ்தான் செஞ்சது கரெக்ட்:

“என் தந்தை மிகப்பெரிய ரசிகர். அவர் கூட கிரிக்கெட்டில் கைகுலுக்கிக் கொள்ளாத நிகழ்வு பற்றி என்னிடம் சொன்னதில்லை. கடந்தக் காலங்களில் மோசமான உறவு இருந்த சூழ்நிலைகளிலும் இந்தியா – பாகிஸ்தான் விளையாடியுள்ளன. அப்போதெல்லாம் கை குலுக்கப்பட்டன. எனவே என்னைப் பொறுத்த வரை கைகுலுக்காதது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல”

இதையும் படிங்க: தோனி மற்றும் ரிஷப் பண்டின் சாதனையை உடைக்க சஞ்சு சாம்சனுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு – விவரம் இதோ

“ஒவ்வொரு தனி நபர்களும் தங்களது சொந்த வழியைக் கொண்டிருப்பார்கள். ஒருவர் களத்தில் ஆக்ரோஷமாக விளையாட விரும்பினால் ஏன் விடக்கூடாது? வேகப்பந்து வீச்சாளரிடம் ஆக்ரோசத்தை எடுத்து விட்டால் எதுவும் இருக்காது. ஒவ்வொரு வீரரும் தங்களது உணர்வை எப்படி கையாள்வது என்பதைத் தெரிந்திருப்பார்கள். எங்கள் மக்களுக்கு அவமரியாதையைக் கொண்டு வராத வரை கேப்டனாக அவர்களுக்கு (பர்ஹான், ரவூப்) நான் சுதந்திரம் கொடுப்பேன். அதில் எனக்கு எந்த பிரச்சனையுமில்லை” என்று கூறினார்.

- Advertisement -