- Advertisement -
ஆசிய கோப்பை

இந்தியா நம்பர் 1ன்னு யார் சொன்னா? அதே மாதிரி ஆசியக் கோப்பை வெல்வோம்.. சூரியகுமார் – சல்மான் பேட்டி

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு நாடுகளில் செப்டம்பர் 9ஆம் தேதி துவங்கியது. இம்முறை 2026 டி20 உலகக் கோப்பைக்கு ஆசிய அணிகள் தயாராகும் வகையில் அத்தொடர் 20 ஓவர் போட்டிகளாக நடைபெறுகிறது. அதில் சிறப்பாக விளையாடி பெற நடப்புச் சாம்பியன் இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஓமன், ஹாங்காங், ஐக்கிய அரபு நாடுகள் ஆகிய அணிகள் தயாராகியுள்ளன.

அத்தொடரில் இந்தியா எதிரணிகளை வீழ்த்தி கோப்பையை வெல்லும் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே 8 முறை ஆசியக் கோப்பைகளை வென்றுள்ள இந்தியா ஐசிசி டி20 தர வரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கடந்த வாரம் ஷார்ஜாவில் ஐக்கிய அரபு நாடுகள், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் பங்கேற்ற முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்றது.

- Advertisement -

நம்பர் 2 இடத்துக்கு போட்டி:

அத்தொடருக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் “ஆசிய கண்டத்தின் 2வது சிறந்த அணியான ஆப்கானிஸ்தான் கேப்டன்” என்று சொல்லி ரசித் கானிடம் ஒரு செய்தியாளர் பேசினார். ஏனெனில் 2023 உலகக்கோப்பையில் பாகிஸ்தானை தோற்கடித்த ஆப்கானிஸ்தான் 2024 டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தை தோற்கடித்து செமி ஃபைனல் சென்றது. மறுபுறம் பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறியது. எனவே ஆப்கானிஸ்தான் ஆசியாவில் இந்தியாவுக்கு பின் 2வது சிறந்த அணியாக திகழ்வதாக அந்த செய்தியாளர் விளக்கினார்.

அதைக்கேட்ட பாகிஸ்தான் சல்மான் ஆகா சிரித்தது வைரலானது. கடைசியில் அத்தொடரில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்த பாகிஸ்தான் கோப்பையை வென்றது. இந்நிலையில் அது பற்றி 2025 ஆசியக் கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் இந்தியா – பாகிஸ்தான் கேப்டன்களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு இந்திய கேப்டன் சூரியகுமார் பதிலளித்தது பின்வருமாறு.

- Advertisement -

பாகிஸ்தான் வெல்லும்:

“இந்தியா நம்பர் ஒன் என்று யார் சொன்னது? அதைப்பற்றி நான் கேட்கவில்லை. நாங்கள் டி20 கிரிக்கெட்டில் நீண்ட காலமாக விளையாடி வருகிறோம். உங்களுடைய தயாராகும் முறைகள் நன்றாக இருக்கும் பட்சத்தில் கோப்பையை வெல்வதற்கான முழு தன்னம்பிக்கையுடன் களமிறங்க முடியும்” என்று கூறினார். அதே கேள்விக்கு முத்தரப்பு தொடரைப் போல ஆசியக் கோப்பையை பாகிஸ்தான் வெல்லும் என்று கேப்டன் சல்மான் ஆகா தெரிவித்த பதில் பின்வருமாறு.

இதையும் படிங்க: ஆசியக் கோப்பையில் சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் விளையாடுவாரா? கேப்டன் சூர்யகுமார் பேட்டி

“வேகமாக நகரக்கூடிய டி20யில் யாரையும் வெற்றியாளர் என்று சொல்ல முடியாது. ஏனெனில் போட்டி நாளில் நீங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும். அதில் ஓரிரு ஓவர்கள் போட்டியை மாற்றும். சமீபத்திய முத்தரப்பு தொடர் எங்களுக்கு நன்றாகத் தயாராகும் வாய்ப்பைக் கொடுத்தது. முத்தரப்பு கோப்பையை வென்றது நல்லது. இல்லையென்றாலும் நாங்கள் ஆசியக் கோப்பைக்கு வந்து நல்ல கிரிக்கெட்டை விளையாடி வெல்ல வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -