ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் துவங்கியது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் அத்தொடரில் எதிரணிகளைத் தோற்கடித்து கோப்பையை வெல்ல சூரியகுமார் தலைமையிலான இந்திய அணி தயாராகியுள்ளது. அத்தொடரில் இந்திய அணி தங்களுடைய முதல் போட்டியில் செப்டம்பர் 10ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகளை துபாயில் எதிர்கொள்கிறது.
அந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடுவாரா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனெனில் நீண்டகாலம் மிடில் ஆர்டரில் விளையாடி தடுமாறிக் கொண்டிருந்த அவருக்கு கௌதம் கம்பீர் பயிற்சியாளராக வந்ததும் ஓப்பனிங்கில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் 3 சதங்களை அடித்த சாம்சன் ஒரு வழியாக இந்திய அணியில் தமக்கான இடத்தைப் பிடித்தார்.
சாம்சன் விளையாடுவாரா:
ஆனால் தற்போது சுப்மன் கில் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் பிளேயிங் லெவனில் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 3, 4வது இடங்களில் திலக், சூரியகுமார் விளையாடுவார்கள் என்பதால் சாம்சன் பெஞ்சில் அமர வைக்கப்பட்டு சுப்மன் கில் ஓப்பனிங்கில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அதற்கு ரவி சாஸ்திரி உள்ளிட்ட நிறைய முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அது பற்றி கேப்டன் சூரியகுமார் யாதவிடம் நேரடியாகவே செய்தியாளர் கேட்டார்கள். அதற்கு சாம்சனை நாங்கள் நல்லபடியாக பார்த்துக் கொள்வோம் என்று சூரியகுமார் தெரிவித்தார். அதனால் சாம்சன் விளையாடுவார் என்று மறைமுகமாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நாளை உங்களுக்கு நானே பிளேயிங் லெவன் பற்றி மெசேஜ் செய்கிறேன்”
சூரியகுமார் பதில்:
“உண்மையில் நாங்கள் அவரை நன்றாக கவனித்து வருகிறோம். அதனால் கவலைப்பட வேண்டாம். நாளை சரியான முடிவை எடுப்போம். ஐக்கிய அரபு நாடுகள் அணியும் உற்சாகப்படுத்தக்கூடிய கிரிக்கெட்டின் பிராண்டை விளையாடுகிறார்கள். சமீபத்தில் விளையாடிய தொடரில் அவர்கள் நெருங்கி வந்தார்கள். எனவே அவர்களும் ஆசியக் கோப்பையில் வெற்றிக்கோட்டை தாண்டுவதற்கு நான் வாழ்த்துகிறேன்”
இதையும் படிங்க: ஆசிய கோப்பையில் சஞ்சு சாம்சன் விளையாடனும்னா இதுமட்டும் தான் ஒரே வாய்ப்பு – எம்.எஸ்.கே பிரசாத் பேட்டி
“அவர்களுக்கு எதிராக விளையாட நாங்களும் உற்சாகத்துடன் உள்ளோம். இந்திய அணி கடைசியாக ஜனவரி – பிப்ரவரி மாதம் டி20 கிரிக்கெட்டில் விளையாடினாலும் எங்களுடைய வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி நன்றாக செயல்பட்டனர். ஜூன் மாதத்துக்குப் பின் நாங்கள் எந்த கிரிக்கெட்டையும் ஒன்றாக சேர்ந்து விடவில்லை. ஆனால் ஒரு புதிய தொடரில் இப்படித்தான் சவால் இருக்கும். நீங்கள் அதை ஏற்றுக்கொண்டு நாளை முதல் சவாலை எப்படி சமாளிப்பது என்று பார்க்க வேண்டும்” எனக் கூறினார்.



