ஆசிய கோப்பையில் சஞ்சு சாம்சன் விளையாடனும்னா இதுமட்டும் தான் ஒரே வாய்ப்பு – எம்.எஸ்.கே பிரசாத் பேட்டி

MSK Prasad
- Advertisement -

எதிர்வரும் 2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யார்? என்பதே கடந்த சில நாட்களாக பலரது கேள்வியாகவும் இருந்து வருகிறது. ஏனெனில் இந்திய அணியின் துவக்க வீரராகவும், விக்கெட் கீப்பராகவும் விளையாடி வந்த சஞ்சு சாம்சன் இந்த தொடரில் சுப்மன் கில்லின் வருகையால் தனது இடத்தை இழப்பார் என்று கூறப்படுகிறது. ஏனெனில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

சஞ்சு சாம்சன் விளையாட இதுதான் வழி : எம்.எஸ்.கே பிரசாத்

அதனால் அவர் நேரடியாக பிளேயிங் லெவனில் இடம் பிடிப்பார். ஒருவேளை சுப்மன் கில் துவக்க வீரராக விளையாடினால் சஞ்சு சாம்சன் வெளியேற்றப்பட அதிக வாய்ப்புள்ளது. அதன் காரணமாக ஜிதேஷ் சர்மா பின்வரிசையில் பினிஷராகவும், விக்கெட் கீப்பராகவும் இணைவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

கடந்த 12 மாதங்களாகவே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சஞ்சு சாம்சன் கடைசியாக தான் விளையாடிய 10 போட்டிகளில் மூன்று சதங்களை அடித்து மிகச் சிறப்பான ஃபார்மில் உள்ளார். ஆனாலும் அவரது இடம் சுப்மன் கில் எந்த இடத்தில் விளையாடுகிறாரோ அதை வைத்து தான் முடிவாகும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் விளையாட வேண்டுமெனில் ஒரு வாய்ப்பு தான் இருப்பதாக முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : சஞ்சு சாம்சன் இந்திய அணியில் மூன்றாம் இடத்தில் பேட்டிங் செய்ய வந்தால் மட்டுமே அவர் பிளேயிங் லெவனில் இடம் பிடிப்பார்.

- Advertisement -

ஏனெனில் அபிஷேக் ஷர்மாவுடன் சுப்மன் கில் தான் இறங்குவார் என்பது நிர்வாகத்தின் முடிவாக இருக்கும். அப்படி இருக்கும் வேளையில் சஞ்சு சாம்சன் மூன்றாவது இடத்தில் களமிறங்கினால் மட்டுமே அவரால் சிறப்பாக செயல்பட முடியும். மிடில் ஆடரிலோ அல்லது பின் வரிசையிலோ அவரால் சிறப்பாக விளையாட முடியாது என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன்கள்? விக்கெட்? எடுக்கப்போவது யார்? – தினேஷ் கார்த்திக் மற்றும் போக்ளே கணிப்பு

இதன் காரணமாக சஞ்சு சாம்சன் டாப் ஆர்டரில் மூன்றாவது வீரராக விளையாடினால் மட்டுமே பிளேயிங் லெவனின் இடம் பிடிக்க முடியும். அதுவே நிர்வாகத்தின் முடிவு வேறாக இருக்கும் பட்சத்தில் ஜிதேஷ் சர்மா பினிஷராக களமிறங்க கூட வாய்ப்புள்ளது என எம்.எஸ்.கே பிரசாத் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement