தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 டி20 தொடரில் ஜூலை எட்டாம் தேதி இரவு 7.15 மணிக்கு 6வது போட்டி நடைபெற்றது. சேலத்தில் உள்ள எஸ்சிஎஃப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
ஆனால் அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே திணறலாக விளையாடிய துவக்க வீரர்கள் சிவம் சிங் 2 (12), கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 (10) ரன்களில் அவுட்டாகி மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர். இருப்பினும் மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய பாபா இந்திரஜித் அரை சதமடித்து 51 (34) ரன்கள் விளாசினார்.
சேலம் வெற்றி:
அவருடன் சேர்ந்து தன்னுடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடிய விமல் குமார் 47 (32) ரன்கள் எடுத்தார். ஆனால் அடுத்ததாக வந்த பூபதி குமார் 8, சரத்குமார் 5, கிஷோர் 2 ரன்களில் அதிரடியாக விளையாடும் முயற்சியில் அவுட்டானார்கள். அதனால் கடைசியில் தினேஷ் ராஜ் அதிரடியாக 20* (10) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் திண்டுக்கல் 149/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. சேலம் சார்பில் அதிகபட்சமாக சன்னி சந்து, ஹரீஷ் குமார் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
அதைத் தொடர்ந்து 150 ரன்களை துரத்திய சேலம் அணிக்கு பவர்பிளே ஓவர்களை சரியாக பயன்படுத்திய கவின் – அபிஷேக் ஆகிய துவக்க வீரர்கள் 59 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அதில் அபிஷேக் 28 (26) ரன்களிலும் கவின் 46 (34) ரன்களிலும் அவுட்டானதை தொடர்ந்து அடுத்ததாக வந்த வைத்யா தடுமாறி 15 (18) ரன்களில் ஆட்டமிழரந்தார்.
ஆனால் மறுபுறம் 3வது இடத்தில் அதிரடியாக விளையாடிய ராஜேந்திரன் விவேக் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 51* (28) ரன்கள் குவித்து ஃபினிஷிங் செய்தார். அதனால் 18.1 ஓவரிலேயே 150/3 ரன்கள் எடுத்த சேலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது. அதன் காரணமாக திண்டுக்கல் சார்பில் சந்தீப் வாரியர், விக்னேஷ், வருண் சக்கரவர்த்தி தலா 1 விக்கெட் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.
இதையும் படிங்க: புதுசா வராரு.. அவரும் அபிஷேக்கும் சேர்ந்தா ரொம்ப கஷ்டம்.. ஜிம்பாப்வே அணியை எச்சரித்த ஆண்டி பிளவர்
முன்னதாக இப்போட்டியில் திண்டுக்கல் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யும் போது தாமே துவக்க வீரராக களமிறங்கினார். ஆனால் பேட்டிங்கில் சொதப்பிய அவர் 6 (10) ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் மற்றொரு துவக்க வீரர் சிவம் சிங் அதை விட மோசமாக 2 (10) ரன்கள் எடுத்தார். அந்த வகையில் கேப்டனாக ரவிச்சந்திரன் அஸ்வின் துவக்க வீரராக களமிறங்கிய முடிவு திண்டுக்கல் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.



