புதுசா வராரு.. அவரும் அபிஷேக்கும் சேர்ந்தா ரொம்ப கஷ்டம்.. ஜிம்பாப்வே அணியை எச்சரித்த ஆண்டி பிளவர்

Andy Flower
- Advertisement -

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதில் ஐசிசி 2024 உலகக் கோப்பையை வென்ற பெரும்பாலான சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் சுப்பன் கில் தலைமையில் ஐபிஎல் 2024 தொடரில் அசத்திய வீரர்கள் இளம் வீரர்களுடன் இத்தொடரில் இந்தியா விளையாடி வருகிறது.

அந்த சூழ்நிலையில் நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டியில் வென்ற ஜிம்பாப்வே அணியை 2வது போட்டியில் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. குறிப்பாக 2வது போட்டியில் அபிஷேக் சர்மா 100, ரிங்கு சிங் 48*, ருதுராஜ் 77* ரன்கள் குவித்த உதவியுடன் இந்தியா 235 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதைத் துரத்திய ஜிம்பாப்வே 134 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

எச்சரித்த பிளவர்:
அதனால் மிகப்பெரிய வெற்றி பெற்று தங்களை உலகச் சாம்பியன் என்பதை நிரூபித்த இந்தியா தொடரை சமன் செய்தது. அந்த சூழ்நிலையில் ஜெய்ஸ்வால், சிவம் துபே மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் 2024 டி20 உலகக் கோப்பையை முடித்துக் கொண்டு இத்தொடரின் 3வது போட்டிக்கான இந்திய அணியில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் அபிஷேக் ஷர்மா அடித்து நொறுக்கிய நிலையில் ஜெய்ஸ்வாலும் சேர்ந்தால் ஜிம்பாப்வே அணி வெற்றி பெறுவது கடினம் என்று முன்னாள் ஜாம்பவான் வீரர் ஆன்டி பிளவர் தெரிவித்துள்ளார். இது பற்றி சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தத் தொடரில் ஜெய்ஸ்வால் வருகிறார் அல்லவா? இது போன்ற போட்டியை தான் இந்திய அணியின் தேர்வாளர்களும் ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள்”

- Advertisement -

“அவர் இத்தொடரில் இணைவது போட்டியை இன்னும் சுவாரசியமாக்கும். ஜெய்ஸ்வால் போன்ற தேர்வுகள் இருப்பது இந்திய அணிக்கு சிறப்பானது. ஐபிஎல் தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வந்த அபிஷேக் ஷர்மா தன்னுடைய இரண்டாவது சர்வதேச போட்டியிலேயே சதமடித்ததால் தன்னம்பிக்கையுடன் இருப்பார். அவருக்கு இது அற்புதமான துவக்கம். இளம் வீரர்கள் இது போன்ற ரன்களை எடுப்பது மிகவும் முக்கியம்”

இதையும் படிங்க: பி.சி.சி.ஐ அறிவித்த 125 கோடி பரிசுத்தொகையில் யார் யாருக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்? – விவரம் இதோ

“ஏனெனில் அது உங்களுடைய தன்னம்பிக்கையை அதிகரித்து இன்னும் சிறப்பாக செயல்படுவதற்கு உதவும். இந்த தொடரில் அபிஷேக் ஷர்மாவின் ஆட்டத்தை பார்ப்பதற்காக இன்னும் நான் ஆவலுடன் உள்ளேன்” என்று கூறினார். முன்னதாக ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமான அரை சதமடித்து சாதனை படைத்த ஜெய்ஸ்வால் இந்தியாவுக்காகவும் கிடைத்த வாய்ப்புகளில் அதிரடியாக விளையாடினார். எனவே அபிஷேக் ஷர்மாவும் அவரும் சேர்ந்து விளையாடுவதை பார்க்க ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement