- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்த காலத்திலும் இப்படியா? தோனியின் பிறந்தநாளில் சல்மான் கான் முன்னிலையில்.. ஷாக்சி செய்த செயல்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனி ஜூலை 7ஆம் தேதி தன்னுடைய 43வது பிறந்த நாளை கொண்டாடினார். கடந்த 2004ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே நிலையான இடம் பிடித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். அதே போல அனுபவமற்ற கேப்டன்ஷிப் பதவியில் இந்தியாவை அபாரமாக வழி நடத்திய அவர் 2007 டி20 உலகக் கோப்பையை வென்றார்.

அதே வேகத்தில் 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபியையும் இந்தியாவுக்காக வென்ற அவர் உலகிலேயே 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்தார். அத்துடன் அழுத்தமான மிடில் ஆர்டரில் நிறைய போட்டிகளில் நங்கூரமாக நின்று வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் சிறந்த ஃபினிஷராகவும் போற்றப்படுகிறார்.

- Advertisement -

நெகிழ்ச்சியான செயல்:
அதே போல ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணிக்காக 5 கோப்பைகளை வென்ற அவர் வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார். அந்த வகையில் பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அவருக்கு ரசிகர்களும் முன்னாள் இந்நாள் வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எம்எஸ் தோனி தம்முடைய பிறந்தநாளை மும்பையில் கொண்டாடினார்.

குறிப்பாக பிரபல தொழிலதிபர் அம்பானியின் மகன் திருமண விழா மும்பையில் நடைபெற்று வருகிறது. அந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தம்முடைய மனைவி சாக்ஸியுடன் தோனி சென்றுள்ளார். அங்கே தம்முடைய பிறந்தநாளை மனைவி மற்றும் நண்பர்களுடன் தோனி கொண்டாடினார். அந்த நிகழ்வில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

- Advertisement -

அதைத் தொடர்ந்து தோனியும் சாக்சியும் சேர்ந்து பிறந்தநாள் கேக் வெட்டினார்கள். அதன் பின் கேக்கை தம்முடைய மனைவிக்கு தோனி ஊட்டினார். அதில் ஒரு பகுதியை மீண்டும் தோனிக்கு சாக்சி ஊட்டினார். அப்படியே சல்மான் கான் போன்ற நட்சத்திரங்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் தம்முடைய கணவரான தோனியின் காலில் விழுந்து ஷாக்சி ஆசிர்வாதம் வாங்கி கும்பிட்டுக் கொண்டார். மறுபுறம் “நல்லாரு மகளே” என்ற வகையில் தோனி ஜாலியாக ஆசீர்வாதம் செய்தார்.

இதையும் படிங்க: ரோஹித் சர்மா கஷ்டப்பட்டு கட்டமைத்த ரெக்கார்டை காலி செய்த சுப்மன் கில் – அப்படி என்ன நடந்தது?

அப்போது அங்கிருந்தவர்கள் அனைவரும் வியப்புடன் ஆரவாரம் செய்து கைதட்டி பாராட்டு தெரிவித்தனர். ஏனெனில் இப்போதெல்லாம் பல மனைவிகள் கணவரின் காலில் விழுவதெல்லாம் அரிதாகி விட்டது. குறிப்பாக நட்சத்திரங்களின் மனைவியாக இருப்பவர்கள் அதுவும் பொதுவெளியில் தங்களது கணவர் காலில் விழுவதெல்லாம் அரிதினும் அரிதாகி விட்டது. ஆனால் இந்த காலத்திலும் ஷாக்ஷி தம்முடைய கணவரான தோனிக்கு மதிப்பளித்து காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.

- Advertisement -