இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துவிட்டு தனது ஓய்வை அறிவித்தார். அதனை தொடர்ந்து முன்னணி வீரர்கள் அனைவருக்கும் ஓய்வு வழங்கப்பட்டு சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வே சென்றுள்ள வேளையில் இந்த தொடரின் முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்து இந்திய அணி படைக்க இருந்த மாபெரும் சாதனை ஒன்றினை வீணடித்துள்ளது.
அதுவும் முதல் போட்டியிலேயே இப்படி கில் தலைமையிலான இந்திய அணி தோல்வியை சந்தித்து இருப்பது ஏமாற்றத்தையும் அளித்துள்ளது. அந்த வகையில் இந்திய அணி தவறவிட்ட சாதனை யாதெனில் :
இந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு முன்னதாக தொடர்ச்சியாக இந்திய அணி 12 சர்வதேச டி20 போட்டிகளில் தோல்வியையே சந்திக்காமல் வெற்றிநடை போட்டு வந்தது.
குறிப்பாக 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியிலிருந்து அண்மையில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி டி20 உலககோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரை எந்த ஒரு டி20 ஆட்டத்திலும் இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் இருந்தது.
இந்நிலையில் இப்படி தொடர்ச்சியாக 12 டி20 போட்டிகளில் தோல்வியையே சந்திக்காமல் வெற்றிநடை போட்டு வந்த இந்திய அணி இன்னும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தால் டி20 கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து அதிக வெற்றிகளை தொடர்ச்சியாக பதிவு செய்த அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்திருக்கும்.
இதையும் படிங்க : விராட், ரோஹித் இல்லாமல் தோற்க இதான் காரணம்.. கொடியை இன்னைக்கு உயர்த்துவோம்.. பிஸ்னோய் பேட்டி
ஆனால் தற்போது கில் தலைமையிலான இந்திய அணி இந்த முதல் போட்டியில் தோல்வியை சந்தித்ததால் அந்த சாதனை முடிவுக்கு வந்துள்ளது. விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா போன்ற அனுபவ வீரர்கள் இல்லாமல் இந்திய அணி எவ்வாறு செயல்படப்போகிறது என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்துள்ளது அனைவரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



