விராட், ரோஹித் இல்லாமல் தோற்க இதான் காரணம்.. கொடியை இன்னைக்கு உயர்த்துவோம்.. பிஸ்னோய் பேட்டி

Ravi Bishnoi
- Advertisement -

ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பெரும்பாலான சீனியர் வீரர்களுக்கு இத்தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் சுப்மன் கில் தலைமையில் ஐபிஎல் 2024 தொடரில் அசத்திய இளம் வீரர்களுடன் இத்தொடரில் இந்தியா களமிறங்கியுள்ளது.

ஆனால் ஜூலை ஆறாம் தேதி துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியிலேயே ஜிம்பாப்வே அணியிடம் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அவமான தோல்வியை சந்தித்தது. ஏனெனில் 2024 டி20 உலகக்கோப்பை விளையாடுவதற்கு கூட ஜிம்பாப்வே அணி தகுதி பெறவில்லை. ஆனால் அந்த அணியிடம் கடந்த வாரம் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

- Advertisement -

தோல்விக்கான காரணம்:
குறிப்பாக வெறும் 116 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் அபிஷேக் சர்மா, ரியான் பராக், துருவ் ஜுரேல் போன்ற இளம் வீரர்கள் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடுவதற்கு சரியானவர்கள் என்று ஒருதரப்பு இந்திய ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர்கள் இந்தியாவின் வெற்றிக்கான பொறுப்பை தங்களைப் போன்ற இளம் வீரர்களிடம் கொடுத்துள்ளதாக ரவி பிஸ்னோய் கூறியுள்ளார்.

இருப்பினும் முதல் போட்டியில் பார்ட்னர்ஷிப் அமைக்காததால் தோல்வியை சந்தித்ததாக தெரிவிக்கும் அவர் 2வது போட்டியில் இந்தியாவின் வெற்றி கொடியை மீண்டும் உயர்த்துவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது புது வீரர்களுக்கான நேரம். மூத்த வீரர்கள் ஓய்வு பெற்று பொறுப்பை எங்களிடம் ஒப்படைத்துள்ளனர். எனவே கொடியை முன்னோக்கி எடுத்துச் செல்வது எங்களுடைய பொறுப்பு”

- Advertisement -

“சுப்மன் கில் கேப்டன்ஷிப் நன்றாகவே இருந்தது. அவர் பவுலிங் மாற்றங்களை சரியாக செய்தார். இங்கிருந்து நாங்கள் நன்றாக விளையாடி வலுவாக கம்பேக் கொடுக்க முயற்சிக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இரண்டாவது போட்டியில் நாங்கள் புத்துணர்ச்சியான மனதுடன் கம்பேக் கொடுக்க வேண்டும். முதல் போட்டியில் நாங்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தோம்”

இதையும் படிங்க: என்ன இருந்தாலும் அறிமுக இந்திய வீரரிடம் இப்படியா பண்ணுவீங்க? ஜிம்பாப்வே வீரர் மீது ரசிகர்கள் அதிருப்தி

“ஒரு நல்ல 20 – 30 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால் வித்தியாசம் ஏற்பட்டிருக்கும். அதை செய்யாததே வெற்றியில் வித்தியாசம் ஏற்படுத்தியது. ஜிம்பாப்வே பவுலிங் மற்றும் ஃபீல்டிங் துறையில் அசத்தினர் அவர்கள் எங்களை பார்ட்னர்ஷிப் அமைக்கப்படவில்லை. நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் கற்றுக் கொள்கிறோம்” என்று கூறினார் இதைத் தொடர்ந்து இத்தொடரின் இரண்டாவது போட்டி ஜூலை 7ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement