எல்லாரும் அதிக ரன்ஸ் அடிக்க விரும்புவாங்க.. ஆனா அதை செய்ய விரும்புறேன்.. சாய் சுதர்சன் பேட்டி

Sai Kishore 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 31ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற 12வது போட்டியில் ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் தோற்கடித்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 20 ஓவரில் 162/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அப்துல் சமட் 29, ஹென்றிச் க்ளாஸென் 24 ரன்கள் எடுக்க குஜராத் சார்பில் அதிகபட்சமாக மோகித் சர்மா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதைத்தொடர்ந்து 163 ரன்களை துரத்திய குஜராத்துக்கு ரிதிமான் சஹா 25 (13), கேப்டன் சுப்மன் கில் 36 (28), சாய் சுதர்சன் 45 (36) ரன்கள் அடித்து வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். அதை வீணடிக்காமல் கடைசியில் டேவிட் மில்லர் அதிரடியாக 44* (27) ரன்கள் விஜய் சங்கர் 14* (11) ரன்களும் அடித்தனர். அதனால் 19.1 ஓவரிலேயே இலக்கை எட்டிய குஜராத் இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 2வது வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

க்ளாஸ் சுதர்சன்:
மறுபுறம் கடந்த போட்டியில் 277 ரன்கள் அடித்து நொறுக்கி சாதனை படைத்த ஹைதராபாத் இம்முறை பேட்டிங்கில் பெரிய ரன்கள் எடுக்க தவறியது. அதனால் அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ், மயங் மார்க்கண்டே, சபாஷ் அகமது தலா 1 விக்கெட் எடுத்தும் வெற்றியை தொட முடியாத ஹைதராபாத் தங்களுடைய 3 போட்டிகளில் 2வது தோல்வியை பதிவு செய்தது.

குஜராத்தின் இந்த வெற்றிக்கு களமிறங்கி 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 45 (36) ரன்கள் அடித்த தமிழக வீரர் சாய் சுதர்சன் தன்னுடைய பங்காற்றினார். இந்நிலையில் இந்த வருடம் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் சாய் சுதர்சன் 40 – 50 ரன்களில் 2 முறை அவுட்டாகியுள்ளார். அதைப் பற்றி தொகுப்பாளர் கேட்டதற்கு சாய் சுதர்சன் நெகிழ்ச்சியான பதிலை கொடுத்தது பின்வருமாறு.

- Advertisement -

“என்னுடைய பங்கு அணியின் வெற்றிக்கு உதவியதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். இந்த பிட்ச்சில் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. எனவே ஸ்பின்னர்களை குறி வைத்து அடித்து அழுத்தத்தை குறைக்க முயற்சித்தோம். மோகித் சர்மா மற்றும் ரசித் கான் ஆகியோர் வெற்றியில் மகத்தான பங்காற்றினர். அவர்கள் 10 – 15 ரன்கள் கொடுப்பதை தடுத்து நிறுத்தியது வெற்றியில் முக்கிய சாவியாக இருந்தது”

இதையும் படிங்க: 277 ரன்ஸ் அடித்த ஹைதெராபாத்தை அடக்கிய குஜராத்.. 2 ஓவரில் மாற்றிய மோஹித்.. அசால்ட்டாக முடித்த சுதர்சன், மில்லர்

“எங்களுடைய சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடுவது சாதகமாக அமைந்தது. ஒவ்வொரு போட்டியிலும் அனைவரும் அதிக ரன்கள் அடிக்க விரும்புவார்கள். ஆனால் நான் என்னுடைய அணி வெற்றி பெறுவதற்கு பங்காற்றுவதைப் பற்றி மட்டுமே நினைக்கிறேன். அதைச் செய்தால் சாதனைகள் தாமாக வரும்” என்று கூறினார்.

Advertisement