
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட மிகப்பெரிய டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது எதிர்வரும் ஜூன் 20-ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணி விரைவில் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கு முன்னதாக தற்போது அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்திய ஏ அணியானது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்கு நாட்கள் கொண்ட இரண்டு பயிற்சி போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
அப்படி நடைபெற்று வரும் இந்த பயிற்சி தொடரின் முதல் போட்டியானது டிராவில் முடிவடைந்துள்ள வேளையில் இரண்டாவது பயிற்சி போட்டி ஜூன் 6-ம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த இரண்டாவது பயிற்சி போட்டியில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள கே.எல் ராகுல் பங்கேற்று விளையாட இருக்கிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஆனால் முதன்மை அணியில் இடம் பிடித்திருந்த கேப்டன் சுப்மன் கில் மற்றும் தமிழக வீரர் சாய் சுதர்சன் ஆகியோர் இரண்டாவது பயிற்சி போட்டியை தவறவிட இருக்கிறார்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஏனெனில் ஏற்கனவே சுப்மன் கில் ஐபிஎல் தொடரில் விளையாடியிருந்ததால் தனக்கு ஓய்வு தேவை என்பதற்காக இந்த பயிற்சி போட்டியில் கலந்து கொள்ளாமல் நேரடியாக டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழக வீரர் சாய் சுதர்சனும் இந்த பயிற்சி போட்டியை தவறவிட இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஏனெனில் ஜூன் 3-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் பார்வையாளராக பங்கேற்றிருந்த சாய் சுதர்சன் அங்கு நடைபெற்ற பரிசளிப்பு விழாவிலும் கலந்து கொண்டிருந்தார். இதன் காரணமாக அவர் இங்கிலாந்து செல்ல தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இதுக்கு மும்பை அணியிலேயே இருந்திருக்கலாம்.. லக்னோ அணியின் தோல்வியால் ஜாஹீர் கானுக்கு – ஏற்பட்டுள்ள நிலை
இதன் காரணமாகவே அவர் இந்த பயிற்சி போட்டியில் இருந்து விலகியுள்ளார் என்று கூறப்படுகிறது. எதிர்வரும் இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள சாய் சுதர்சன் நிச்சயம் முதல் போட்டியிலேயே டெஸ்ட் போட்டிகளில் அறிமுக வாய்ப்பை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.