இதுக்கு மும்பை அணியிலேயே இருந்திருக்கலாம்.. லக்னோ அணியின் தோல்வியால் ஜாஹீர் கானுக்கு – ஏற்பட்டுள்ள நிலை

Zaheer Khan
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது கைப்பற்றி அசத்தியது. அதேவேளையில் இந்த இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்த பஞ்சாப் கிங்ஸ் அணியானது மீண்டும் ஒருமுறை கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை இழந்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்தியாவில் நடைபெற்று வந்த இந்த ஐபிஎல் தொடரானது நேற்று முன்தினத்துடன் முடிவடைந்துள்ளது.

ஜாஹீர் கானுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை :

இந்நிலையில் இந்த தொடர் ஆரம்பித்தபோது ரிஷப் பண்ட் தலைமையில் புது உத்வேகத்துடன் பங்கேற்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த தொடரின் 14 போட்டிகளில் விளையாடிய அவர்கள் 6 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் ஏழாம் இடத்தை பிடித்து வெளியேறியது.

- Advertisement -

கடந்த ஆண்டு கே.எல் ராகுல் தலைமையில் விளையாடிய அந்த அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்திருந்த வேளையில் இந்த ஆண்டு மீண்டும் ரிஷப் பண்ட் தலைமையிலும் பிளே ஆப் வாய்ப்பை எட்ட முடியாமல் வெளியேறியிருந்தது. இதன் காரணமாக தற்போது அந்த அணியின் நிர்வாகம் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளது.

குறிப்பாக இந்த தொடரில் அந்த அணியின் பயிற்சியாளர் குழுவில் இருந்த பலரையும் மாற்றிவிட்டு புது பயிற்சியாளர் குழுவை அடுத்த சீசனுக்கு கொண்டு வரலாம் என்றும் முடிவு செய்துள்ளதாக ஒரு தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் அந்த நடவடிக்கையின் முதல் படியாக லக்னோ அணியின் மென்டராக நியமிக்கப்பட்ட ஜாகிர் கான் நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

46 வயதான முன்னாள் இந்திய வீரரான ஜாஹீர் கான் ஏற்கனவே மும்பை அணியின் பயிற்சியாளர் குழுவில் வெற்றிகரமான ஒரு உறுப்பினராக திகழ்ந்து வந்தார். ஆனால் அந்த அணியில் இருந்து வெளியேறிய அவர் லக்னோ அணியில் இணைந்திருந்தார். இந்நிலையில் தற்போது லக்னோ அணியின் நிர்வாகம் அவரது ஓராண்டு கான்டிராக்ட்டை முடிவுக்கு கொண்டு வரப்போவதாகவும், அவரை உடனடியாக அணியிலிருந்து வெளியேற்ற போவதாகவும் கூறப்படுகிறது. அதோடு கூடுதலாக தலைமை பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கரும் நீக்கப்படுவார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : ஷ்ரேயாஸ் ஐயர் செய்த இந்த தப்பை ஏத்துக்கவே முடியாது.. தோல்விக்கு அவரே காரணம் – யோக்ராஜ் சிங் குற்றச்சாட்டு

ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் இருந்த ஜாஹீர் கான் அங்கே இருந்திருக்கலாம் என்றும் அந்த அணியை விட்டு வெளியேறி இங்கு வந்து ஓராண்டிலேயே ஒதுக்கப்பட இருப்பது பலரது மத்தியில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

Advertisement