ஷ்ரேயாஸ் ஐயர் செய்த இந்த தப்பை ஏத்துக்கவே முடியாது.. தோல்விக்கு அவரே காரணம் – யோக்ராஜ் சிங் குற்றச்சாட்டு

Yograj Singh
- Advertisement -

கடந்த ஜூன் 3-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற அந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

ஷ்ரேயாஸ் ஐயரால் தான் பஞ்சாப் அணி தோற்றது : யோக்ராஜ் சிங்

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை குவித்தது. பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 43 ரன்களையும், ரஜத் பட்டிதார் 26 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்வின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை மட்டுமே குவித்ததால் 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி சார்பாக அதிகபட்சமாக ஷஷாங்க் சிங் 61 ரன்களையும், ஜாஷ் இங்கிலீஷ் 39 ரன்களையும் குவித்தனர்.

இந்நிலையில் இந்த போட்டியின் போது பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியடைய ஷ்ரேயாஸ் ஐயரின் விக்கெட் தான் காரணம் என்றும் அவர் எளிதாக தனது விக்கெட்டை தாரை வார்த்து விட்டார் என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவ்ராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

ஷ்ரேயாஸ் ஐயர் இந்த இறுதிப் போட்டியில் அவுட்டான விதம் ஒரு குற்றத்திற்குரிய செயல். ஏனெனில் மும்பை அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இப்படி இறுதிப் போட்டியில் இரண்டு பந்துகளில் வெறும் 1 ரன் மட்டுமே எடுத்து அதுவும் ரொமேரியோ ஷெப்பர்டு பந்துவீச்சில் ஆட்டமிழந்தது தவறு. தன்னுடைய வழக்கமான பாணியில் அவர் அட்டாக் செய்து ஆடியிருக்கலாம்.

இதையும் படிங்க : ஆர்சிபி கோப்பை வென்றது கிரிக்கெட்டுக்கே சோகமான நாள்.. சாடிய அனில் கும்ப்ளே சோகப் பதிவு

அதை தவிர்த்து தேர்டு மேன் திசையில் சிங்கிள் அடிக்க நினைத்து ஆட்டமிழந்துள்ளார். இப்படி அவரது மோசமான ஷாட் செலக்சனால் அவர் தவறான நேரத்தில் ஆட்டமிழந்ததே பஞ்சாப் அணியை தோல்விக்கு அழைத்துச் சென்றது என யோகிராஜ் சிங் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement