இவரை செலக்ட் பண்ணது தப்பே இல்ல.. 2 ஆவது போட்டியிலேயே 36 வருட சாதனையை சமன் செய்த – சிங்கக்குட்டி சாய் சுதர்சன்

Sai-Sudharsan
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இரண்டாவது போட்டியானது செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் டிசம்பர் 19-ஆம் தேதி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.

அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது தென்னாப்பிரிக்க அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 46.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ரன்களை மட்டுமே குவித்தது. இந்திய அணி சார்பாக துவக்க வீரர் சாய் சுதர்சன் 62 ரன்களையும், கே.எல் ராகுல் 56 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

இதன் காரணமாக 212 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது தென் ஆப்பிரிக்க அணியானது விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக துவக்க வீரராக களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன் தன்னுடைய அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார்.

அதோடு அவரது இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய வீரராக 36 ஆண்டுகள் சாதனை ஒன்றினையும் அவர் சமன் செய்துள்ளார். அந்த வகையில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் அறிமுகமான சாய் சுதர்சன் தனது முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து இன்றைய இரண்டாவது போட்டியிலும் 65 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என அரைசதம் கடந்து இறுதியில் 83 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 62 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க : வாழ்த்த வந்தது குத்தமா? வன்மத்துடன் ஹைதெராபாத் செய்த மட்டமான வேலையால்.. டேவிட் வார்னர் ஏமாற்றம்

இதன் மூலம் இந்திய அணிக்காக அறிமுகமாகி அடுத்தடுத்த இரண்டு போட்டியில் அரைசதம் அடித்த வீரர் என்ற நவ்ஜோத் சிங் சித்து சாதனையை அவர் சமன் செய்துள்ளார். தற்போது சாய் சுதர்சன் விளையாடி வரும் விதத்தை பார்க்கும் பொழுது இர்பான் பதான் கூறியதை போன்றே அடுத்த 10 முதல் 15 ஆண்டுகள் சாய் சுதர்சன் தொடர்ச்சியாக இந்திய அணிக்காக விளையாடுவார் என்பது போன்றே தெரிகிறது.

Advertisement