வாழ்த்த வந்தது குத்தமா? வன்மத்துடன் ஹைதெராபாத் செய்த மட்டமான வேலையால்.. டேவிட் வார்னர் ஏமாற்றம்

David Warner SRH
- Advertisement -

டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற்ற ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டை 6.80 கோடிகள் கொடுத்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் வாங்கியது. கடந்த 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் உலகக்கோப்பை ஃபைனலில் சதமடித்து இந்தியாவை தோற்கடித்த அவர் ஆஸ்திரேலியா அடுத்தடுத்த கோப்பைகளை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

அதனால் பெரிய தொகைக்கு வாங்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது போலவே அவரை ஹைதெராபாத் 6.8 கோடி என்ற தொகைக்கு வாங்கியது. அந்த நிலையில் தம்முடைய சக அணி வீரரை பாராட்ட நினைத்த மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அதற்கான புகைப்படத்தை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தேடியுள்ளார்.

- Advertisement -

மட்டமான செயல்:
ஆனால் அப்போது தான் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்வாகம் தம்மை பிளாக் செய்திருப்பதை அறிந்து டேவிட் வார்னர் பெரிய ஏமாற்றத்தை சந்தித்தார். அது பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து டேவிட் வார்னர் ஏமாற்றத்துடன் பகிர்ந்துள்ளது பின்வருமாறு. “டிராவிஸ் ஹெட் பற்றிய பதிவை மீண்டும் பதிவிடுவதற்காக நான் முயற்சித்தேன். ஆனால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்வாகம் என்னை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிளாக் செய்துள்ளார்கள்” என்று கூறியுள்ளார்.

அது மட்டுமில்லாமல் ட்விட்டர் பக்கத்திலும் ஹைதராபாத் நிர்வாகம் தம்மை பிளாக் செய்துள்ளதை வார்னர் ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளார். முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டு கேப்டனாக ஹைதராபாத் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த வார்னர் 2019 வரை அனைத்து தொடர்களில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து ஏராளமான வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வந்தார்.

- Advertisement -

இருப்பினும் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் 2020 சீசனில் முதல் முறையாக தடுமாறிய அவரை பாதியிலேயே விளையாடும் 11 பேர் அணியிலிருந்து கழற்றி விட்ட ஹைதராபாத் கேன் வில்லியம்சனை கேப்டனாக அறிவித்து கூல்டிரிங்ஸ் தூக்க வைத்து அவமானப்படுத்தியது. அதைத்தொடர்ந்து மொத்தமாக தங்களுடைய அணியிலிருந்தே கழற்றி விட்ட ஹைதராபாத்துக்கு 2021 டி20 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற வார்னர் தக்க பதிலடி கொடுத்து தம்முடைய தரத்தை நிரூபித்தார்.

இதையும் படிங்க: பேட் கம்மின்ஸை 20.50 கோடிக்கு வாங்கிய காவ்யா மாறன்.. ஒரே பதிவில் கலாய்த்த – சி.எஸ்.கே நிர்வாகம்

அதன் பின் டெல்லி அணிக்காக வாங்கப்பட்ட அவர் கடந்த சில வருடங்களாக ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். இருப்பினும் தற்போது பழையவற்ற எதுவும் நினைக்காமல் ஹைதெராபாத் இன்ஸ்டாகிராம் பக்கத்தை வார்னர் தேடி சென்றுள்ளார். மறுபுறம் நன்றி மறந்த ஹைதராபாத் நிர்வாகம் வன்மத்துடன் இப்படி அவரை பிளாக் செய்து மட்டமான வேலையை செய்துள்ளது என்றே சொல்லலாம்.

Advertisement