பேட் கம்மின்ஸை 20.50 கோடிக்கு வாங்கிய காவ்யா மாறன்.. ஒரே பதிவில் கலாய்த்த – சி.எஸ்.கே நிர்வாகம்

Kavya-Maran
- Advertisement -

துபாயில் இன்று டிசம்பர் 19-ஆம் தேதி துவங்கிய நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஏலத்தில் 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்திருந்த வேளையில் 77 வீரர்கள் மட்டுமே ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்த ஐபிஎல் ஏளமானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் பத்து அணிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் இன்று நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் எதிர்பார்த்தது போலவே பெரிய தொகைக்கு அதாவது 20 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் அணிக்காக ஏலம் போகியுள்ளார்.

- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தி கோப்பையை வென்றதற்காகவே அவருக்கு பெரிய தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் பேட் கம்மின்ஸை எடுக்க பெங்களூரு மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கடுமையான போட்டியை வெளிப்படுத்தின.

இறுதியில் 20 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் அணி பேட் கம்மின்ஸ்ஸை தங்களது அணியில் இணைத்தது. இருப்பினும் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து அணியில் சேர்க்கும் அளவிற்கு பிரமாதமான ஆட்டத்தை கம்மின்ஸ் இதுவரை ஐபிஎல் தொடரில் வழங்கியதில்லை.

- Advertisement -

ஆனாலும் இவ்வளவு பெரிய தொகையை கொடுத்து சன்ரைசர்ஸ் அணி அவரை விலைக்கு வாங்கியுள்ளது பலரது மத்தியிலும் கேலி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் தங்களது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு அதில் : “இவருக்கு 20 கோடியா?” என்பது போல ஒரு பதிவினை வெளியிட்டு காவ்யா மாறனை கலாய்த்துள்ளது.

இதையும் படிங்க : யாருப்பா இந்த சமீர் ரிஸ்வி.. ரைட் ஹேண்ட் ரெய்னாவா.. 8.4 கோடிக்கு சிஎஸ்கே வாங்க காரணம் என்ன?

ஏனெனில் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் சரி, பேட்டிங்கிலும் சரி பெரிய அளவில் இதுவரை ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதில்லை. பல்வேறு வீரர்கள் மிகச் சிறப்பான திறமை கொண்டிருந்தும் அவர்களுக்கு குறைவான தொகையே கிடைத்த நிலையில் இத்தனை கோடி கொடுத்து கம்மின்ஸை ஏன் எடுத்தார்கள்? என்பது போல விமர்சித்து சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ள இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement