யாருப்பா இந்த சமீர் ரிஸ்வி.. ரைட் ஹேண்ட் ரெய்னாவா.. 8.4 கோடிக்கு சிஎஸ்கே வாங்க காரணம் என்ன?

Sameer Rizvi
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 2023 உலகக்கோப்பையில் அறிமுகத் தொடரிலேயே 523 ரன்கள் குவித்து மாபெரும் உலக சாதனை படைத்த நியூசிலாந்தை சேர்ந்த இளம் வீரர் ரச்சின் ரவீந்தராவை முதல் வீரராக 1.80 கோடிக்கு வாங்கியது.

அதை தொடர்ந்து 2023 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற 2 போட்டிகளிலும் சதமடித்து அபாரமாக செயல்பட்ட மற்றொரு நியூஸிலாந்து வீரர் டார்ல் மிட்சேலை 14 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கிய சென்னை இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திரங்களை சர்துள் தாக்கூரையும்வாங்கியது. இந்த நிலைமையில் சமீர் ரிஸ்வி எனும் இந்தியாவைச் சேர்ந்த இளம் வீரரை 8.40 கோடி என்ற பெரிய தொகைக்கு சென்னை வாங்கியது ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது.

- Advertisement -

ரைட் ஹேண்ட் ரெய்னா:
ஏனெனில் வெறும் 20 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் இதுவரை சர்வதேச அரங்கில் விளையாடாத போதிலும் சென்னை இவ்வளவு தொகைக்கு வாங்கியது ஏன் என்று ரசிகர்கள் வியப்படைந்தனர். உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அவர் 2022 சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் 18 சிக்ஸர்களை அடித்து தம்முடைய திறமையை வெளிப்படுத்தினார்.

குறிப்பாக அந்த தொடரில் தாம் எதிர்கொண்ட ஒவ்வொரு 11 பந்துக்கும் 1 சிக்ஸர் அடித்து அதிரடியாக விளையாடிய அவர் 11 போட்டிகளில் 295 ரன்களை 134.70 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலும் 49.16 என்ற நல்ல சராசரியில் எடுத்துள்ளார். மேலும் 2023 சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் 7 இன்னிங்ஸில் அவர் 227 ரன்கள் அடித்தார். அதை விட நடைபெற்று முடிந்த யூபி டி20 லீக் தொடரில் கான்பூர் சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடிய அவர் 455 ரன்களை 188.80 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி அனைவரது கவனத்தை ஈர்த்தார்.

- Advertisement -

மேலும் 23 வயதிற்கு உட்பட்ட வீரர்களுக்கான உள்ளூர் தொடரில் சிறப்பாக விளையாடிய அவர் இறுதிப் போட்டியில் 50 பந்துகளில் 84 ரன்கள் அடித்து தனது அணியை வெற்றி பெற வைத்தார். அத்தொடரில் 454 ரன்களை விளாசிய அவர் 37 சிக்சர்களையும் பறக்க விட்டு அசத்தினார். அந்த வகையில் உத்திர பிரதேசத்தில் பிறந்து சென்னைக்காக சின்ன தல என்று ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு அசத்திய சுரேஷ் ரெய்னா வலது பேட்ஸ்மேனாக விளையாடினால் எப்படி இருக்குமோ அப்படி இவர் அசத்தி வருவதாக நேற்று முன்னாள் தமிழக வீரர் அபினவ் முகுந்த் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: விலையை கேட்டு தெறிக்கும் ரசிகர்கள்.. 2.15க்கு 20.50 கோடிக்கு கமின்ஸ் செய்த சாதனையை 3.15க்கு உடைத்த ஸ்டார்க்

அந்த சூழ்நிலையில் இன்று நடைபெற்ற ஏலத்தில் டெல்லி அணியிடம் கடுமையாக போட்டி போட்டு சமீர் ரிஸ்வியை 8.40 கோடி என்று பெரிய தொகைக்கு சென்னை வாங்கியுள்ளது. குறிப்பாக வருங்காலத்தில் லோயர் மிடில் ஆர்டரில் விளையாடி ஃபினிஷிங் செய்வதற்காக அவரை இந்த தொகை கொடுத்து சென்னை வாங்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement