விலையை கேட்டு தெறிக்கும் ரசிகர்கள்.. 2.15க்கு 20.50 கோடிக்கு கமின்ஸ் செய்த சாதனையை 3.15க்கு உடைத்த ஸ்டார்க்

Mitchell Starc
- Advertisement -

துபாயில் டிசம்பர் 19ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு நடைபெற்ற ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களை வாங்குவதற்கு அனைத்து அணிகளும் கடுமையான போட்டி போட்டன. அதில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஃபைனலில் சதமடித்து ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்த ட்ராவிஸ் ஹெட் 6.8 கோடிக்கு ஹைதராபாத் அணிக்காக முதலாவதாக வாங்கப்பட்டார்.

அதை தொடர்ந்து ரச்சின் ரவீந்திரா, டார்ல் மிட்சேல் போன்ற நியூசிலாந்து வீரர்களை சென்னை நிர்வாகம் 1.8, 14 கோடிகளுக்கு வாங்கியது. ஆனால் அதைத் தொடர்ந்து வந்த ஆஸ்திரேலியாவின் பட் கமின்ஸை 20.50 கோடி என்ற பிரம்மாண்ட தொகைக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்வாகம் வாங்கியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

- Advertisement -

ஸ்டார்க் சாதனை:
குறிப்பாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் 2023 உலகக் கோப்பை ஆகிய 2 ஐசிசி தொடர்களில் கேப்டனாக மிகச் சிறப்பாக செயல்பட்ட அவர் ஆஸ்திரேலியா கோப்பையை வெல்வதற்கு கேப்டனாகவும் வேகப்பந்து வீச்சாளராகவும் முக்கிய பங்காற்றினார். அதன் காரணமாக இத்தனை கோடிகளுக்கு வாங்கப்பட்ட அவர் ஐபிஎல் வரலாற்றின் ஏலத்தில் 20 கோடிகளுக்கு வாங்கப்பட்ட முதல் வீரர் மற்றும் அதிக தொகைக்கு விலை போன வீரர் என்ற 2 மெகா சரித்திர சாதனைகளை படைத்தார்.

அந்த நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஸ்டார்க் ஏலத்திற்கு வந்தார். கடந்த சில வருடங்களாகவே நாட்டுக்காக விளையாடுவதற்காக ஐபிஎல் தொடரை புறக்கணித்து வந்த அவர் ஒரு வழியாக மீண்டும் இம்முறை ஏலத்தில் பங்கேற்றார். அவரை வாங்குவதற்கு மும்பை, கொல்கத்தா, பெங்களூரு போன்ற அணிகளுக்கு இடையே மிகப் பெரிய போட்டி நிலவியது.

- Advertisement -

இறுதியில் 24.75 கோடி என்ற பிரம்மாண்ட தொகைக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் அவரை வாங்கியது ஒட்டு மொத்த எதிரணி ரசிகர்களை தெறிக்க விட்டது. ஏனெனில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற நட்சத்திர இந்திய வீரர்கள் கூட 17, 15 கோடிகளுக்கு மட்டுமே விளையாடும் நிலையில் 24.75 கோடிக்கு கொல்கத்தாவுக்காக வாங்கப்பட்ட மிட்சேல் ஸ்டார்க் ஐபிஎல் வரலாற்றின் ஏலத்தில் அதிக தொகைக்கு விலை போன வீரர் என்ற மாபெரும் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: மீண்டும் சென்னை அணிக்கு திரும்பிய செல்லப்பிள்ளை. சி.எஸ்.கே ஏலத்தில் எடுத்த 2ஆவது வீரர் – யார் தெரியுமா?

குறிப்பாக மதியம் 2.15 மணிக்கு கமின்ஸ் படைத்த சாதனையை 3.40 மணிக்கு ஸ்டார்க் உடைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். அந்த வகையில் இந்த இடத்தில் இந்திய வீரர்களை விட ஆஸ்திரேலிய வீரர்கள் பெரிய தொகைக்கு வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement