மீண்டும் சென்னை அணிக்கு திரும்பிய செல்லப்பிள்ளை. சி.எஸ்.கே ஏலத்தில் எடுத்த 2ஆவது வீரர் – யார் தெரியுமா?

CSK
- Advertisement -

டிசம்பர் 19-ஆம் தேதியான இன்று துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கத்தில் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் ஏலமானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று உள்ள வேளையில் 77 வீரர்களை மட்டுமே அனைத்து அணிகளும் சேர்ந்து வாங்க இருக்கிறது. இதன் காரணமாக இந்த ஏலமானது அனைவரது மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. அதே வேளையில் தோனி தலைமையிலான நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யப்போகிறது? என்பதை ரசிகர்கள் அனைவரும் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே உலகக்கோப்பை தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணியின் இளம் வீரரான ரச்சின் ரவீந்திராவை 1 கோடியே 80 லட்சம் என்கிற விலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது விலைக்கு வாங்கியது.

அதனைத்தொடர்ந்து தற்போது இரண்டாவது வீரராக ஷர்துல் தாகூரை 4 கோடி ரூபாய் என்கிற விலைக்கு வாங்கியுள்ளது. ஏற்கனவே சென்னை அணிக்காக சில ஆண்டுகள் விளையாடியுள்ள ஷர்தல் தாகூர் சென்னை அணியின் ராசியான வீரராக பார்க்கப்படும் வேளையில் மீண்டும் அவர் சென்னை அணிக்காக தேர்வு செய்துள்ளது.

- Advertisement -

அவரின் இந்த வருகை ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் சென்னை அணியில் தற்போது விளையாடி வரும் தீபக் சாகர், பதிரானா போன்ற வீரர்கள் அடிக்கடி காயத்தை சந்தித்து வரும் வேளையில் நிலையாக தொடர்ந்து சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும் வீரராக பார்க்கப்படும் ஷர்துல் தாகூர் சென்னை அணிக்கு திரும்பியிருப்பது ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.

இதையும் படிங்க : தோனியின் பிளான்.. போன வருஷம் விலை போகாத மிட்சேலை.. 14 கோடிக்கு சிஎஸ்கே வாங்க 2 காரணம் இதோ

அதோடு ஏற்கனவே சென்னை அணியின் நிர்வாகத்தை நன்றாக புரிந்து கொண்டவர் என்பதனால் ஷர்துல் தாகூர் சென்னை அணிக்கு திரும்பினால் அது பலமாக இருக்கும் என்று ரெய்னா கூறியிருந்த வேளையில் மீண்டும் சென்னை அணி அவரை விலைக்கு வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement