தோனியின் பிளான்.. போன வருஷம் விலை போகாத மிட்சேலை.. 14 கோடிக்கு சிஎஸ்கே வாங்க 2 காரணம் இதோ

CSK Daryl Mitchell
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் துபாயில் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெற்றது. அந்த ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களை வாங்குவதற்காக அனைத்து அணிகளும் கடுமையான போட்டி போட்ட நிலையில் நியூசிலாந்தை சேர்ந்த இளம் வீரர் ரச்சின் ரவீந்திராவை 1.8 கோடி என்ற குறைந்த விலைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

ஏனெனில் 2023 உலகக் கோப்பையில் 23 வயதிலேயே 523 ரன்கள் குவித்த அவர் இந்திய சூழ்நிலைகளில் மிகச் சிறப்பாக விளையாடினார். அதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் அறிமுக தொடரிலேயே அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனை படைத்து ஜாம்பவான்களின் பாராட்டுகளை பெற்ற அவரை சென்னை நிர்வாகம் வருங்காலத்தை கருத்தில் வாங்கிய முடிவு ரசிகர்களால் வரவேற்கப்பட்டது.

- Advertisement -

14 கோடிக்கு மிட்சேல்:
ஆனால் அவரை விட மற்றொரு நியூசிலாந்து வீரர் டார்ல் மிட்சேலை 14 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி போட்டு வாங்கியது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் கடந்த வருடம் எந்த அணியும் வாங்காததால் விலை போகாத அவரை இம்முறை சென்னை இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது. இருப்பினும் இதன் பின்னணியில் தோனி இருப்பார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

ஏனெனில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான அவர் 2023 உலகக் கோப்பையில் தரம்சாலா நகரில் பேட்டிங்க்கு சாவலான மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சதமடித்து நியூசிலாந்தின் வெற்றிக்கு போராடினார். அதை விட மும்பையில் நடைபெற்ற முதல் செமி ஃபைனலில் மீண்டும் இந்தியாவுக்கு எதிராக 7 விக்கெட்களை எடுத்து மிரட்டிய ஷமி போன்ற அனைத்து பவுலர்களையும் மிகச் சிறப்பாக எதிர்கொண்ட அவர் சதமடித்து 134 (119) ரன்கள் விளாசி வெற்றிக்கு போராடினார்.

- Advertisement -

அந்த வகையில் 2023 உலகக் கோப்பையில் சிறந்த பவுலிங்கை கொண்ட இந்திய அணிக்கு எதிரான 2 போட்டிகளிலும் மிட்சேல் 2 சதங்கள் அடித்து இந்திய சூழ்நிலைகளில் தம்மால் அசத்த முடியும் என்பதை காண்பித்தார். இது மட்டுமல்லாமல் கடந்த வருடத்துடன் அம்பத்தி ராயுடு ஓய்வு பெற்ற நிலையில் பென் ஸ்டோக்ஸையும் சென்னை விடுவித்தது.

இதையும் படிங்க: வரலாறு காணாத விலைக்கு போன பட் கமின்ஸ்.. 2 பிரம்மாண்ட சாதனை.. வாங்கியது எந்த அணி?

எனவே மிடில் ஆர்டரில் நங்கூரமாகவும் அதிரடியாகவும் விளையாடக்கூடிய திறமையும் தேவைப்படும் நேரங்களில் மித வேகப்பந்து வீச்சாளராக செயல்படும் தன்மையையும் கொண்டுள்ள காரணத்தாலேயே அவரை சென்னை இவ்வளவு பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது என்றே சொல்லலாம். மொத்தத்தில் ராயுடு, ஸ்டோக்ஸ் ஆகியோரது இடத்தை நிரப்புவதற்காக 2023 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக அசத்திய மிட்சேலை கேப்டன் தோனியுடன் விருப்பத்துடன் சென்னை வாங்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement