வரலாறு காணாத விலைக்கு போன பட் கமின்ஸ்.. 2 பிரம்மாண்ட சாதனை.. வாங்கியது எந்த அணி?

IPL Auction PAt Cummins
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் துபாயில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு துவங்கியது. அதில் பங்கேற்ற 333 வீரர்களில் தங்களுக்கு தேவையானவர்களை வாங்குவதற்காக ஆரம்பத்திலேயே அனைத்து அணிகளும் போட்டியிட்டன. அந்த ஏலத்தில் முதலாவதாக 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் உலகக்கோப்பை ஃபைனல்களில் ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்த டிராவிஸ் ஹெட் 6.8 கோடிக்கு ஹைதராபாத் அணிக்காக வாங்கப்பட்டார்.

அதை தொடர்ந்து ரோவ்மன் போவல் ராஜஸ்தான் அணிக்காக வாங்கப்பட்ட நிலையில் நியூசிலாந்தை சேர்ந்த இளம் வீரர் ரச்சின் ரவீந்தராவை சென்னை சூப்பர் கிங்ஸ் 1.8 கோடி என்ற குறைந்த தொகைக்கு வாங்கி அசத்தியது. குறிப்பாக 2023 உலகக் கோப்பையில் 523 ரன்கள் குவித்த அவர் அறிமுக தொடரிலேயே அதிக ரன்கள் அடித்த வீரராக மாபெரும் உலக சாதனை படைத்தார்.

- Advertisement -

கமின்ஸ் சாதனை:
அதன் காரணமாக குறைந்தது 5 கோடிகளுக்கும் மேல் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவரை சென்னை குறைந்த விலையில் வாங்கியது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. ஆனால் அவரைத் தொடர்ந்து ஏலத்துக்கு வந்த ஆஸ்திரேலியாவின் பட் கமின்ஸை வாங்குவதற்கு பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கிடையே மெகா போட்டி ஏற்பட்டது.

அதில் எதிரணிகளுக்கு கொஞ்சமும் சளைக்காமல் பணம் போனாலும் பரவாயில்லை விட்டு விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஏலம் கேட்ட ஹைதராபாத் கடைசியில் 20.50 கோடி என்ற பிரம்மாண்டத் தொகைக்கு பட் கமின்ஸை வாங்கியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதன் வாயிலாக 2008 முதல் இதுவரை நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின் வரலாற்றில் 20 கோடிகளுக்கும் மேல் வாங்கப்பட்ட முதல் வீரர் மற்றும் அதிக தொகைக்கு விலை போன வீரர் என்ற 2 மாபெரும் சாதனைகளை பட் கமின்ஸ் படைத்துள்ளார்.

- Advertisement -

இதற்கு முன் 2023 சீசனில் இங்கிலாந்து வீரர் சாம் கரண் 18.5 கோடிக்கு பஞ்சாப் அணிக்காக வாங்கப்பட்டதே முந்தைய சாதனையாகும். இருப்பினும் 2023 சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்து கேப்டனாக கோப்பையை வென்ற அவர் 2023 ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக கோப்பையை தக்க வைத்து அசத்தினார். அதை விட 2023 உலகக் கோப்பை ஃபைனலில் மீண்டும் இந்தியாவை தோற்கடித்த அவர் ஆஸ்திரேலியா 6வது கோப்பையை வெல்ல உதவினார்.

இதையும் படிங்க: 2024 ஐ.பி.எல் ஏலத்தில் முதல் வீரராக உலகக்கோப்பை நாயகனை தட்டி தூக்கிய சி.எஸ்.கே – எந்த வீரர் தெரியுமா?

அப்படி ஒரே வருடத்தில் 2 ஐசிசி உலகக் கோப்பைகளை கேப்டனாக வென்ற காரணத்தாலும் நல்ல வேகப்பந்து வீச்சாளராக இருப்பதாலும் பட் கமின்ஸ் 20.50 கோடிக்கு விலை போனதில் ஆச்சரியமில்லை என்றே சொல்லலாம். இருப்பினும் கடந்த காலங்களில் இதே போல் பெரிய தொகையை கொடுத்து வாங்கிய வீரர்கள் அசத்தாத நிலையில் ஹைதராபாத் அணியின் இந்த முடிவு சரியாக இருக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Advertisement