IPL 2023 : சிஎஸ்கே’வுக்கு சிம்ம சொப்பனமாக மாறி போராடிய தமிழக வீரர் சாய் சுதர்சன் – ஃபைனலில் படைத்த 3 சாதனைகள் இதோ

- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வந்த ஐபிஎல் 2023 டி20 தொடரில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அசத்திய சென்னை மற்றும் நடப்பு சாம்பியன் குஜராத் ஆகிய அணிகள் மாபெரும் இறுதிப் போட்டியில் மோதின. இருப்பினும் மழையால் மே 28ஆம் தேதி நடைபெற வேண்டிய அந்த போட்டி ரிசர்வ் நாளில் நடைபெற்ற நிலையில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய குஜராத் 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 214/4 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் சரவெடியாக 8 பவுண்டரி 6 சிக்ஸருடன் 96 (47) ரன்களும் ரிதிமான சஹா 54 (39) ரன்களும் எடுக்க சுமாராக செயல்பட்ட சென்னை சார்பில் அதிகபட்சமாக பதிரனா 2 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அதை தொடர்ந்து மழையால் 15 ஓவரில் 171 ரன்களை துரத்திய சென்னைக்கு ருதுராஜ் கைக்வாட் 26 (16) டேவோன் கான்வே 47 (26) என தொடக்க வீரர்கள் 74 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியான ரன்களை குவித்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து மிடில் ஆர்டரில் ரகானே 27 (13) ராயுடு 19 (8) என முக்கிய பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு போராடி அவுட்டான நிலையில் கேப்டன் தோனி கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

இருப்பினும் மறுபுறம் நின்ற சிவம் துபே 32* (21) ரன்களை எடுத்ததால் கடைசி ஓவரில் மோகித் சர்மா வீசிய கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட போது 6, 4 ரன்களை அடித்த ஜடேஜா 15 *(9) ரன்களுடன் சூப்பர் பினிஷிங் கொடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வெற்றி பெற வைத்து 5வது கோப்பையை வென்று மும்பையின் ஆல் டைம் சாதனையை சமன் செய்ய உதவினார்.

அதனால் மோஹித் சர்மா 3, நூர் அஹமத் 2 விக்கெட்களை எடுத்தும் போராடித் தோற்ற குஜராத்துக்கு அதிக ரன்கள் அடித்து அசத்திய தமிழக வீரர் சாய் சுதர்சன் போராட்டமும் வீணானது. குறிப்பாக துஷார் தேஷ்பாண்டே வீசிய 17வது ஓவரில் 6, 4, 4, 4 என அடுத்தடுத்த பவுண்டரிகளை தெறிக்க விட்ட அவர் மிகப்பெரிய அழுத்தம் மிகுந்த போட்டியாக கருதப்படும் ஃபைனலில் வலுவான சென்னையை புரட்டி எடுத்து ஜாம்பவான் சச்சின் உட்பட பலரது பாராட்டுகளை பெற்றார்.

- Advertisement -

1. அப்படி இந்த போட்டியில் போராடி தோற்றாலும் சதத்தை நழுவ விட்ட சாய் சுதர்சன் ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஃபைனலில் 90களில் அவுட்டான 3வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அந்த பட்டியல்:
1. முரளி விஜய் : 95, பெங்களூருக்கு எதிராக, 2011
2. மனிஷ் பாண்டே : 94, பஞ்சாப்புக்கு எதிராக, 2014
3. சாய் சுதர்சன் : 96, சென்னைக்கு எதிராக, 2024*

2. அதை விட ஐபிஎல் வரலாற்றில் ஃபைனல் போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர் என்ற மனிஷ் பாண்டேவின் 9 வருட சாதனையை உடைத்து அவர் புதிய வரலாறு படைத்தார். அந்த பட்டியல்:
1. சாய் சுதர்சன் : 96, சென்னைக்கு எதிராக, 2023*
2. மனிஷ் பாண்டே : 94, பஞ்சாப்புக்கு எதிராக, 2014
3. மன்விந்தர் பிஸ்லா : 89, சென்னைக்கு எதிராக, 2012

- Advertisement -

3. மேலும் ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஃபைனலில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த 3வது வீரர் என்ற பெருமையும் பெற்றார். அந்த பட்டியல்:
1. ஷேன் வாட்சன் : 117*, ஹைதராபாத்துக்கு எதிராக, 2018
2. ரிதிமான் சஹா : 115*, கொல்கத்தாவுக்கு எதிராக, 2014
3. சாய் சுதர்சன் : 96, சென்னைக்கு எதிராக, 2023*
4. முரளி விஜய் : 95, பெங்களூருக்கு எதிராக, 2011
5. மனிஷ் பாண்டே : 94, பஞ்சாப்புக்கு எதிராக, 2014

இதையும் படிங்க:கோப்பை வென்ற சென்னைக்கு பரிசு எத்தனை கோடி? ஐபிஎல் 2023 தொடரில் வழங்கப்பட்ட மொத்த 15 பரிசு பட்டியல் இதோ

4. அத்துடன் ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஃபைனலில் மிகவும் இளம் வயதில் 50+ ரன்கள் சதமடித்த 2வது வீரர் என்ற சாதனையும் சாய் சுதர்சன் படைத்தார். அந்த பட்டியல்:
1. மன்னன் வோஹ்ரா : 20 வருடம் 318 நாட்கள்
2. சாய் சுதர்சன் : 21 வருடம் 226 நாட்கள்*
3. சுப்மன் கில் : 22 வருடம் 37 நாட்கள்

Advertisement