கோப்பை வென்ற சென்னைக்கு பரிசு எத்தனை கோடி? ஐபிஎல் 2023 தொடரில் வழங்கப்பட்ட மொத்த 15 பரிசு பட்டியல் இதோ

- Advertisement -

கோடைகாலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக நடைபெற்ற ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் குஜராத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த சென்னை 5வது கோப்பையை வென்று வெற்றிகரமான அணி என்ற மும்பையின் சாதனையை சமன் செய்து அசத்தியது. கடந்த மார்ச் 31ஆம் தேதி துவங்கிய இத்தொடரில் களமிறங்கிய 10 அணிகள் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிப்பதற்கு மும்மடங்கு போட்டி போட்டன. அந்த வகையில் நடைபெற்ற 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றின் முடிவில் நடப்பு சாம்பியன் குஜராத், முன்னாள் சாம்பியன், சென்னை லக்னோ மற்றும் மும்பை ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

IPL-2023

- Advertisement -

அதை தொடர்ந்து குவாலிபயர் 1 போட்டியில் குஜராத்தை தோற்கடித்து நேரடியாக சென்னை ஃபைனலுக்கு தகுதி பெற்ற நிலையில் எலிமினேட்டரில் லக்னோவை வெற்றிகரமான மும்பை தோற்கடித்தது. இருப்பினும் குவாலிபயர் 2 போட்டியில் மும்பையை வீட்டுக்கு அனுப்பிய குஜராத் மே 28இல் தங்களது கோட்டையான அகமதாபாத் மைதானத்தில் துவங்கிய ஃபைனலில் ரிசர்வ் நாளில் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 214/4 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் 96 (47) ரன்கள் எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக பதிரனா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பரிசு பட்டியல்:
அதை தொடர்ந்து மழையால் 15 ஓவரில் 171 ரன்கள் தேவை என்ற இலக்கை துரத்திய சென்னைக்கு ருதுராஜ் கைக்வாட் 26 (16) டேவோன் கான்வே 47 (25) சிவம் துபே 32* (21) ராயுடு 19 (8) ரகானே 27 (13) என முக்கிய பேட்ஸ்மேன்கள் அதிரடியான ரன்களை எடுக்க கடைசியில் ரவீந்திர ஜடேஜா பவுண்டரியுடன் 15* (9) ரன்கள் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்தார். அதனால் அதிகபட்சமாக 3 விக்கெட்களை மோகித் சர்மா எடுத்தும் குஜராத் வெற்றி காண முடியவில்லை. அப்படி 2 மாதங்களாக ரசிகர்களை மகிழ்வித்த இந்த தொடரில் வெற்றியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசுகளை பற்றி பார்ப்போம்:

CSK 2023

1. முதலாவதாக மாபெரும் ஃபைனலில் திரில் வெற்றி பெற்ற தோனி தலைமையிலான சென்னைக்கு வெற்றி கோப்பையுடன் 20 கோடி ரூபாய் ரொக்கமாக பரிசளிக்கப்பட்டது. அதே போல் ஃபைனல் வரை போராடிய பாண்டியா தலைமையிலான குஜராத்துக்கு 12.5 கோடி பரிசாக கொடுக்கப்பட்டது.

- Advertisement -

2. அத்துடன் 890 ரன்களை விளாசி அதிக ரன்கள் அடித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியை வென்ற குஜராத்தின் சுப்மன் கில்லுக்கு தொப்பியுடன் 10 லட்சம் பரிசு கொடுக்கப்பட்டது. அது போக இந்த ஐபிஎல் தொடரின் தொடர் நாயகன் விருதையும் வென்ற அவர் அதற்காக தனியாக 10 லட்சம் பரிசை வென்றார். மேலும் அதிக விக்கெட்டுகளை (28) எடுத்து அசத்திய குஜராத்தின் முகமது ஷமிக்கு ஊதா தொப்பியுடன் 10 லட்சம் பரிசு கொடுக்கப்பட்டது.

Shubman Gill

3. மேலும் ஃபைனலில் ஆட்ட நாயகன் விருது வென்ற டேவோன் கான்வே, பெரிய சிக்சர் அடித்த சாய் சுதர்சன், சிறந்த கேட்ச் பிடித்த எம்எஸ் தோனி, மதிப்பு மிக்கவராக செயல்பட்ட சாய் சுதர்சன், அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்த ரகானே, போட்டியை மாற்றும் வகையில் செயல்பட்ட சாய் சுதர்சன் ஆகியோருக்கு தலா 1 லட்சம் தனித்தனியாக பரிசளிக்கப்பட்டது.

- Advertisement -

3. 625 ரன்களை விளாசி மிரட்டலாக செயல்பட்ட ராஜஸ்தானின் யசஎஸ்வி ஜெய்ஸ்வால் சிறந்த வளரும் வீரருக்கான விருதையும் அதற்கு பரிசாக 10 லட்சத்தையும் வென்றார். மேலும் அதிக சிக்ஸர்கள் (26) அடித்ததற்காக பெங்களூருவின் டு பிளேஸிஸ் 10 லட்சம் பரிசை வென்றது போல் அதிக பவுண்டரிகளை (85) அடித்ததற்காக சுப்மன் கில் 10 லட்சம் பரிசை வென்றார்.

Jaiswal

4. அதே போல இந்த சீசனில் போட்டியை மாற்றிய வீரராக சுப்மன் கில் 1305 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்த சுப்மன் கில் அதற்காக 10 லட்சம் பரிசை வென்றார். மேலும் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் (183.49) ரன்களை குவித்ததற்காக பெங்களூருவின் கிளன் மேக்ஸ்வெல் ஸ்பெஷல் ஸ்ட்ரைக்கர் விருதையும் 10 லட்சத்தையும் பெற்றார்.

இதையும் படிங்க:வீடியோ : ரசிகர்களை கடுப்பேற்றிய உனக்கு ஆட்டோகிராப் போட முடியாது போ ? தீபக் சஹரை ஜாலியாக அலைய விட்ட தல தோனி

5. அத்துடன் இந்த சீசனில் சிறந்த கேட்ச் பிடித்த வீரராக ரசித் கான் அறிவிக்கப்பட்டு 10 லட்சம் பரிசாக வென்றார். மேலும் இந்த சீசனில் அதிக தொலைவில் சிக்ஸர் (115 மீட்டர்) அடித்ததற்காக டு பிளேஸிஸ் 10 லட்சம் பரிசு வென்றார். இந்த சீசனில் சிறந்த மைதானமாக செயல்பட்ட மும்பையின் வான்கடே மற்றும் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் ஆகிய மைதானங்களுக்கு ஸ்பெஷலாக 10 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. மேலும் ஃபேர் பிளே விருதை டெல்லி வென்றது.

Advertisement