IPL 2023 : ஃபைனலில் அசத்தியதற்கு அவரோட சப்போர்ட் தான் காரணம், பதிரனாவை பந்தாடியது பற்றி – சாய் சுதர்சன் பேட்டி

Sai-Sudharsan
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கடந்த 2 மாதங்களாக மகிழ்வித்து நிறைவு பெற்றுள்ள ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது முறையாக வென்று வெற்றிகரமான அணியாக சாதனை படைத்தது. இருப்பினும் அந்த அணிக்கு எதிராக ஒரு லட்சம் ரசிகர்கள் இருந்த உலகின் மிகப்பெரிய அகமதாபாத் மைதானத்தில் நடந்த மாபெரும் இறுதிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த இளம் வீரர் சாய் சுதர்சன் சரவெடியாக விளையாடியது அனைவரது பாராட்டுகளை பெற்றது. குறிப்பாக ஆரம்பத்தில் மெதுவான தொடக்கத்தை பெற்று தடுமாறிய அவர் நேரம் செல்ல செல்ல நங்கூரமாக செட்டிலாகி சென்னை பவுலர்களை வெளுத்து வாங்கினார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக இலங்கை ஜாம்பவான் லசித் மலிங்கா போல ஸ்லிங்கா ஆக்சனுடன் இந்த சீசனில் சிறப்பாக பந்து வீசி பலரது பாராட்டுகளை பெற்று டெத் ஓவர்களில் துல்லியமான யார்க்கர் பந்துகளால் மிரட்டிய மதிசா பதிரனாவின் கடைசி ஓவரின் முதலிரண்டு பந்துகளில் அடுத்தடுத்த சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் 96 (47) ரன்களை எட்டினார். அதனால் சதமடிப்பார் என்று பார்க்கப்பட்ட அவர் அடுத்த பந்தில் 8 பவுண்டரி 6 சிக்ஸருடன் அவுட்டானலும் அழுத்தம் நிறைந்த மாபெரும் ஃபைனலில் தோனி தலைமையிலான சென்னையை பந்தாடி கிட்டத்தட்ட வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக வகையில் செயல்பட்டது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

தமிழகத்தின் புயல்:
அதனால் ஜாம்பவான் சச்சினின் பாராட்டுகளை பெற்ற அவர் சமீப காலங்களாகவே டிஎன்பிஎல் தொடரில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் கடந்த வருடம் குஜராத் அணியில் தேர்வு செய்யப்பட்டு வாய்ப்பு பெற்ற போட்டிகளில் இதே போல அசத்தி முதல் வருடத்திலேயே கோப்பையை வெல்ல உதவினார். அதையும் மிஞ்சி இந்த வருடம் அசத்தியுள்ள அவர் குவாலிபயர் 1 போட்டியில் சுமாராக செயல்பட்டும் மீண்டும் வாய்ப்பு கொடுத்த கேப்டன் பாண்டியா தான் ஃபைனலில் அதிரடியாக பேட்டிங் செய்ய தேவையான ஆதரவு கொடுத்ததாக கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

Sai-Sudharsan-and-Pandya

“என்னுடைய கடந்த இன்னிங்ஸ்களில் நான் சுப்மன் கில்லுடன் இணைந்து பேட்டிங் செய்தேன். இம்முறை சஹாவுடன் பேட்டிங் செய்த போது ரன் ரேட் சரிந்தாலும் நாங்கள் 1 விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தோம். எனவே நாம் சற்று அதிரடியாக ரிஸ்க் எடுத்து விளையாடுவோம் என்று நினைத்தேன். இத்தொடருக்கு 10 நாட்கள் முன்பாகவே நாங்கள் பயிற்சி முகாமில் இணைந்து யார் யார் என்ன வேலைகள் செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்தோம். மேலும் பாண்டியா போன்ற ஒருவர் கேப்டனாக இருப்பது வரமாகும்”

- Advertisement -

“அவர் உங்களுக்கு தேவையான வாய்ப்புகளையும் சிறப்பாக செயல்படுவதற்கான தன்னம்பிக்கையும் கொடுக்கிறார். குறிப்பாக அன்றைய நாளில் உங்களது சுமாரான செயல்பாடுகளையும் தாண்டி அவர் சிறந்த நிலையில் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கிறார். குவாலிபயர் 1 போட்டியில் நான் சுமாராக செயல்பட்டு அவுட்டானேன். ஆனாலும் அவர் கொடுத்த ஆதரவு மற்றும் தன்னம்பிக்கை தான் ஃபைனலில் பெரிய ஷாட்டுகளை விளையாட உதவியது. அதே போல் பதிரனா பந்தை வழுக்கும் வகையில் வீசினார். அதனால் என்னுடைய ஸ்டேன்ஸில் சற்று கீழ் நோக்கி சென்று அவரை எதிர்கொண்டேன்”

Sai-Sudharsan

“அது அந்த சமயத்தில் இயற்கையாக நடைபெற்றது என்பதால் மேற்கொண்டு என்னால் விவரிக்க முடியவில்லை. இருப்பினும் என்னுடைய பேட்டிங்கில் இன்னும் நான் முன்னேற்றம் காண வேண்டும். குறிப்பாக மிடில் மற்றும் டெத் ஓவர்களில் அசத்த வேண்டும். அத்துடன் டிஎன்பிஎல் தொடர் என்னை அனைவரும் பார்ப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது. எனவே விரைவில் துவங்கும் அந்தத் தொடரிலும் நான் அசத்துவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். மேலும் கடந்த ரஞ்சி கோப்பையில் தமிழ்நாட்டுக்காக சில போட்டிகளில் நாங்கள் சுமாராக செயல்பட்டதை நினைத்து வருந்துகிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க:3 வகையான இந்திய அணிக்கும் தனித்தனியே புதிய ஜெர்ஸியை வெளியிட்ட அடிடாஸ் நிறுவனம் – ரசிகர்கள் வரவேற்பு

முன்னதாக டிஎன்பிஎல் தொடரில் 21 லட்சத்துக்கு விளையாடும் அவர் குஜராத் அணியில் வெறும் 20 லட்சத்துக்கு மட்டுமே விளையாடுகிறார். அந்த வகையில் மிகவும் குறைந்த விலைக்கு மிகப்பெரிய செயல்பாடுகளை வெளிப்படுத்தியதாக சாய் சுதர்சனை வெளிமாநிலங்களைச் சேர்ந்த ரசிகர்களும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement